Monday, 20 May 2019

அகேட்

அகேட் (Agate).
இந்த வகை கற்கள் (Chalcedony) சால்சிடோனி என்ற குடும்பத்தை சார்ந்தது. குவார்ட்ஸ் படிகங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக இணைந்து இக்கற்கள் உருவாகின்றன.
மேற்பரப்பு வழவழப்பாக (மெழுகு போன்று) இருக்கும், குறுக்காக பலவண்ண கோடுகள் ஒரு கை தேர்ந்த ஒவியனால் உருவாக்கப்பட்டவை போன்று காட்சியளிக்கும். பெரும்பாலும் இவற்றில் ஒளி ஊடுருவும் தன்மை கிடையாது. உலகின் பல இடங்களில், பல வண்ணங்களில் கிடைக்கிறது.

தன்மைகளும் பலன்களும்.
நிலைப்படுத்தும் அல்லது சமன் படுத்தும் தன்மை இக்கற்களுக்கு உண்டு, தேவையற்ற பரபரப்பு, படபடப்பு, கை-கால் நடுக்கங்கள் உள்ளவர்கள் இந்த கற்களை பயன்படுத்தினால் உடல் அமைதியடையும்.

மனதை அமைதிப்படுத்தும் சக்தியும் இக்கற்களுக்கு உண்டு,  அலைபாயும் மனம், கவன சிதறல்கள், வாழ்க்கையில் எவ்வித பிடிப்பும் குறிக்கோளும் இல்லாது மனம் போனபடி வாழ்க்கை என இருப்பவர்கள் இந்த கற்களை பயன்படுத்தினால் மனம் அமைதியடையும், ஒருமுகப்படும் வாழ்க்கையில் ஒரு படிப்பும் குறிக்கோளும் தோன்றும்.
வயதின் காரணமாக (50 வயதிற்கு மேற்பட்ட) தளர்வடைந்து இருப்பவர்கள் இந்த கற்களை பயன்படுத்தினால் புதிய உற்சாகமும் தெம்பும் ஏற்படும்.

தன்னம்பிக்கையை வளர்க்கும்
பேச்சு திறனை வளர்க்கும்
இல்லற வாழ்க்கையில் நெருக்கத்தையும் புரிதலையும் உருவாக்கும்.
ஆன்மிக அதிர்வுகள் உண்டு, தியானம் போன்றவற்றை தொடர்ந்து செய்பவர்கள் இக்கற்கள் அணிந்தால் மனம் ஒரு நிலைப்படுவது எளிதாகும்.
செரிமான மண்டலத்தை (Digestive System) இக்கற்கள் சமநிலைபடுத்தும்,  அஜீரண கோளாறுகள், வயிற்றுப்புண், வாயு தொல்லைகள் உள்ளவர்கள் இக்கற்கள் அணிந்தால் நோயின் தீவிரம் குறையும்.

முக்கியமான வகைகள்
Botswana Agate (போட்ஸ்வானா) சாம்பல் நிறத்தில் இருக்கும்.
Fire Agate (நெருப்பு) ஆரஞ்சு, நீலம், பச்சை ஆகிய நிறத்தில் இருக்கும்.
Moss Agate (பாசி)  கறுப்பு, கருநீலம், காவி நிறத்தில் இருக்கும்.

ஒவ்வொரு நிறத்திற்கு பலன்கள் மாறுபடும்.

No comments:

Post a Comment