Monday, 20 May 2019

ரத்தினங்கள்எப்படிஉருவாகின்றன?எப்படிபலன்தருகின்றன?

ரத்தினங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி பலன் தருகின்றன.

ரத்தினங்கள் என்பது, இயற்கை அன்னை மனிதனுக்கு கொடுத்துள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்களாகும். ரத்தின கற்கள் பல காரணங்களால் (இயற்கையிலேயே) பூமிக்குள் உருவாகின்றன.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உலகம் ஒரு நெருப்பு கோளமாக சூரியனிடமிருந்து பிரிந்து வந்தது இதை big bang theory என்பார்கள். பூமியானது காலப்போக்கில்
( மில்லியன் ஆண்டுகள் கணக்கில்) குளிர்ந்த போது, பூமியிலிருந்து வாயுக்கள், தாது பொருட்கள் மற்ற ரசாயன பொருட்கள் சுருங்கி, தங்களுக்குள்ளேயே ஒரு அடா்த்தியையும் (density), உருவத்தையும் (size) அமைத்து கொண்டன. மற்ற இயற்கை பொருட்களுடன் (மண், கல், தாவரங்கள் போன்றவை) இவையும் கலந்து ரசாயன மாற்றங்கள் அடைந்தன. பூமி உருண்டையின் மத்திய பாகம் (earth center)இன்றும் கொதிக்கும் குழம்பு பாறைகளாகவும், திரவ கணிமங்களாகவும் இருந்து வருகின்றன.
பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பு உலகத்தில் இயற்கை சீற்றங்களும் (புயல், மழை, நெருப்பு மழை) கண்டங்களின் சலனங்களும் ( continental movements)  தொடர்ந்து நடைபெற்றன. இதன் மூலம் தான்  பிரபஞ்சத்தில் தனக்கென ஒரு உருவத்தையும் ( shape) சுழற்சியையும் ( rotation) நிலைத் தன்மையையும் (existence) பூமி அடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்களால்தான் பூமி இன்றுள்ள சமநிலைக்கு வந்துள்ளது. இதையே பூமியின் பாிணாமவளா்ச்சி   (earth's revolutionary process) என்பார்கள். பூமியின் மேல் பாகம் குளிர்ந்த பிறகுதான் பூமியின் மீது உயிரினங்கள் தோன்றின. புல், பூண்டு முதல் மிருகங்கள், மனிதர்கள் வரை பூமியில் உருவாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின. பூமியின் மத்திய பாகம் இன்றும் நெருப்பு பந்தாக சுழன்று கொண்டிருக்கிறது. அது எப்போதும் பூமியின் வெளிப்புறம் வர துடித்து கொண்டிருக்கிறது. பூமியின் மேல் பரப்பு (earth crust ) பலவீனமாக இருக்கும் இடங்களில் நெருப்பு குழம்பானது (lava) பூமியை பிளந்து கொண்டு வெளியே பீறிடுகிறது. தன்னிடம் உள்ள அருஞ்செல்வங்களையும் சோ்த்துக் கொண்டு எாிமலைகள் (valcano ) மூலம் வெளியே தள்ளுகிறது.

இந்த எாிமலை குழம்புதான் ( lava) ரத்தினங்களின் இயற்கை சுரங்கமாக இருக்கிறது.
எாிமலையானது மனிதா்க்கு எண்ணற்ற துன்பங்களை கொடுத்தாலும், அவைகளால் கிடைக்கும் நற்பலன்கள் ஏராளம். ஏகப்பட்ட ரத்தினங்களும் (Gems), கணிமங்களும் ( elements), பல உலோகங்களும் ( metal ores) எாிமலையிலிருந்து தான் கிடைக்கின்றன.

இயற்கையிலேயே மண்ணிற்குள் எப்போதும் மூல பொருட்களுக்கிடையில் ( between elements) ரசாயன சோ்க்கைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தாது உப்புக்களும், வாயுக்களும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட சாதகமான சூழ்நிலைகள் அமையும்போது, அவைகள் ரத்தினங்களாக மாற்றமடைகின்றன. எனவேதான், எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ரத்தினங்கள் கிடைக்கின்றன.

அதுமட்டுமல்ல, பூமி நிலைத்தன்மை அடைவதற்கு முன்பு அடிக்கடி பூகம்பங்கள் ( Earthquakes ) ஏற்பட்டன. அப்போது பூமியின் மேலிருந்த தாவரங்களும், பெரும் பாறைகளும், மரங்களும் மற்றும் உயிாிகளும் பூமிக்குள்ளே புதைந்து விட்டன. அவைகள் பூமியின் உள்புற சீதோஷ்ண மாற்றத்தால் (Earth's action on trees or rocks for millions years) அவைகள் தாது உப்புக்களாகவும் (Minerals), ரத்தினங்களாகவும், பலவித பாறைகளாகவும், ரசாயன பொருட்களாகவும் (Various compounds)  பாிணாம வளர்ச்சி அடைந்தன.
இதன் மூலமாகவும் ரத்தினங்கள் உருவாயின. பொதுவாக கார்பன் போன்ற தாதுப் பொருட்களே வைரம் போன்ற விலை உயர்ந்த ரத்தினங்கள் ஆகின்றன. இவைகள் பூமிக்குள் உருவாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இயற்கையாக பூமிக்குள் விளையும் போதுதான் ரத்தினங்களுக்கு பலன்களும், விலை மதிப்பும் ( Value of Gems) அதிகாிக்கின்றன. இவ்வகை ரத்தினங்களை Inorganic Gems என்று அழைக்கப்படுகின்றன.

இவைதவிர கடலிலும் பவழம், முத்து, அம்பா் போன்ற ரத்தினங்கள் கிடைக்கின்றன, இவைகள் சிலவகை பூச்சிகளாலும், உயிா்களாலும் உருவாகின்றன. இவைகளை Organic Gems என்று அழைக்கப்படுகின்றன.

இப்படி இயற்கையாக உருவாகும் ஒவ்வொரு  ரத்தினமும் தங்களுக்குள்ள இயற்கை சக்தியால் ( natural characteristics) ஒவ்வொரு  வகையான அதிா்வுகளை (Vibrations) பெற்றிருக்கின்றன. ரத்தினங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தன்மைகள் மின்காந்த அலைகளையே ( Magnetic waves) உருவாக்குகின்றன. மேலும் அவைகள் ஒரே மாதிாியான அலை வீச்சுகளையும் ( Astronomical Radiations) குறிப்பிட்ட கதிா்களை கட்டுப்படுத்தும் தன்மையையும் பெறுகின்றன. இயற்கையாக கிடைக்கும் ரத்தினங்கள் இயற்கையில் கிடைக்கும் கதிா்வீச்சுகளை ( Sun Rays, Earth's Magnetic Vibrations) முறைப்படுத்தும் வல்லமை கொண்டவை.

பூமியில் விளையும் இந்த ரத்தினங்களும் மற்ற உயிாினங்களை போன்று உயிா்த்துடிப்பு உள்ளவைகளாகவும் ஜீவன் உள்ளவைகளாகவும் விளங்குகின்றன.
ஆனால், மனிதன் உருவாக்கும் செயற்கை ரத்தினங்களுக்கு இந்த ஆற்றல்கள் இருப்பதில்லை. சாதாரணமாக கண்ணால் பாா்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், சோதனைகளின் மூலம் உண்மையான ரத்தினத்தையும் போலி ரத்தினத்தையும் இனம் பிரித்து விடலாம். இதற்கு மிகுந்த அனுபவம் வேண்டும்.

இயற்கை ரத்தினங்களின் அதிா்வுகளும், கிரகங்களின் அதிா்வுகளும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. அலை அதிா்வு அளவுகள் ( Wave lengths) சமமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட ரத்தினத்தின் மூலம், அதற்கு சம அதிர்வுகளுடைய கிரகத்தின் கதிா்களை நாம் கட்டுப்படுத்த முடியும் என்பதே Gemology யின் அடிப்படை உண்மையாகும்.
ரத்தினங்கள் உருவாகும்போதே மின்காந்த அதிர்வுகளை தன்னுள் (Latent) கொண்டுள்ளன. இவைகள் சீரான அணுக்கூட்டங்களை ( Molecular Arrangements) பெற்றுள்ளன. ஒவ்வொரு ரத்தினமும் ஒரு குறிப்பிட்ட சீரான அலை நீளங்கள் (Frequency) மற்றும் ஒரே சீரான அதிர்வுகள் (Vibrations) கொண்டுள்ளன.
இதனால் தான் இன்றைய நவீன காலத்திலும் கடிகாரங்கள் (Watches) தொடர்ந்து ஓடுவதற்காக குவாா்ட்ஸ் ( Quartz) போன்ற கற்கள் வைத்து செய்யப்படுகின்றன. இவைகள் எப்போதும் சீரான மின் அலைகளை வெளிப்படுத்தி கொண்டே இருப்பதால், அந்த கடிகாரமானது தொடர்ந்து இயங்க முடிகிறது.
ஒரு சிறிய ரத்தின கல்லுக்கு ஒரு கடிகாரத்தையே தொடர்ந்து இயக்க வைக்கும் போது, ஒரு சிறந்த ரத்தினத்தை பயன்படுத்தினால் மனிதனின் வாழ்க்கையில் ஏன் நற்பலன்களை ஏற்படுத்த முடியது?

ரத்தினங்களுக்கு பிரபஞ்சத்திலிருந்து வரும் ஒளியலைகளையும் ( Cosmic Waves ) அதிா்வுகளையும் (Vibrations) கிரகித்து, அவற்றை சேமித்து வைத்து, அவைகளை சீா்மைபடுத்தி திரும்பவும் சீரான ஒளியலைகளையும், மின்காந்த அதிர்வுகளையும் வெளியிடும் ஆற்றல் பெற்றவை. நவகிரகங்களிடமிருந்து வெளிவரும் அலைகள் எதிா்மாறான (Negative) தன்மைகளை கொண்டவை. ரத்தினங்கள் அவற்றை கிரகித்து கொண்டு நேரான (Positive) தன்மையாக மாற்றும் ஆற்றல் கொண்டவை ஆகும்.

No comments:

Post a Comment