Thursday, 23 July 2020

உலோகங்களும் நவரத்தினங்களும் சுத்தி செய்யும் முறை

உலோகங்களும் நவரத்தினங்களும் சுத்தி செய்முறை:
தங்கம்
தங்கத் தகட்டிற்குச் செம்மணலைப்பூசி அகலிட்டு அடுப்பேற்றி வாட்டி கழுவி எடுக்க வேண்டும் இவ்வாறு ஏழுமுறை செய்ய தங்கம் சுத்தியாகும்
வெள்ளி
சரிகை வெள்ளியை உருக்கி தகடாக்கி தட்டி காய்ச்சி மணித்தக்காளி சாற்றில் தேய்த்தெடுக்கவும் இவ்வாறு வெள்ளி மடியும் வரை காய்ச்சி காய்ச்சி தேய்த்து கழுவி எடுக்க சுத்தியாகும்
செம்பு
செம்பைத் தகடாய் தட்டி சிவக்கக்காய்ச்சி காடியிலும் பசு கோமியத்திலும் மூன்று முறை தேய்த்து எடுக்கவும் பின்பு எலுமிச்சை பழச்சாற்றில் கெந்தகத்தை அரைத்து செம்புதகட்டில் பூசி பத்து புடம் போட சுத்தியாகும்
ஈயம்
எண்ணெய் பசுவின் கோமியம் காடி புளித்த மோர் சாணச்சாறு எருக்கம் பால் வெள்ளாட்டு பால் இவை ஒவ்வொன்றிலும் ஏழுதரம் உருக்கி வார்கச் சுத்தியாகும்
நாகம்
உருத்திராட்சம் இழைத்தெடுத்த குழம்பில் புன்னை மலரின் மகரந்தபொடியைகலந்து தேன் சேர்த்து அதில் துத்தநாகப் பொடியிட்டு வெயில் வைக்கவும் இவ்விதம் ஒருமாத காலம் செய்து வர நாகம் சுத்தியாகும்
நவபாஷாணம்
சுண்ணாம்பில் சுத்தியாகும்
வைரம்
வைரத்தை எலுமிச்சை பழத்தினுள் வைத்து அகத்தியிலை சாற்றில் வேகவைத்து எடுக்க சுத்தியாகும்
வைடூரியம்
வைடூரியத்தை குதிரை மூத்திரத்திலே போட்டு வெயிலிலே வைத்து அடுத்த நாள் பூசணிக்காய் சாற்றிலே ஊறவைக்கச் சுத்தியாகும்
முத்து
பசுவின் தயிரில் முத்தைப் போட்டு வெயிலில் வைக்கச்சூத்தியாகும்
மாணிக்கம்
மாணிக்கத்தை வெள்ளாட்டு மூத்திரத்தில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து எடுக்க சூத்தியாகும்
மரகதம்
மரகத்தை வச்சிர மூசையிலிட்டு உலையில் வைத்து சூடேறியபின் குதிரை மூத்திரத்தில் ஏழுமுறை தேய்த்து எடுக்க சுத்தியாகும்
புஷ்பராகம்
வெள்ளாட்டு மூத்திரத்திலிட்டு அறு மணிநேரம் வெயில் வைத்து எடுத்து வெந்நீரில் கழுவி எடுக்க சூத்தியாகும்
பவழம்
பவழப் புற்றை பசுமோரில் கிழிகட்டி ஒன்றை மணிநேரம் எடுக்க சுத்தியாகும்
நீலம்
குதிரை மூத்திரத்தில் ஒரு நாள் ஊறவைத்து கழுவி வெயில் உலர்த்த சுத்தியாகும்
கோமேதகம்
குதிரை நீரில் மூன்று நாட்கள் ஊறவைத்து நிலக்குமிழ் சாற்றில் ஒருநாள் ஊறவைத்து எடுக்க சுத்தியாகும்
ஆய்வுகட்டுரை 2002லிருந்து 2020 வரை பல சுவராசிய தகவல்களுடன் புத்தகவடிவில் உங்களை சந்திக்க வருகிறது
Dr.வசந்தராஜ் சீனிவாசன்-BAJM,DCA,DTC,JAP,GS,GEM&NUM
,போடிநாயக்கனூர்