Thursday, 29 February 2024

வளர்ச்சி தரும் வைரம்

Beauty, Durability, Rarity  – அழகு, நீடித்திருக்கும் தன்மை, அரிதாகவே கிடைப்பது – ஆக இந்த மூன்று பண்புகளும் இருந்தால் அந்தக் கல்லை அரிய கல் என்று கூறலாம் என மேலை நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது நூல்களோ இன்னும் ஒரு பண்பைச் சேர்க்கிறது.

Usablility – பயன்மை; அது வாழ்க்கைக்கு உதவுகிறதா என்று பார் என்கிறது!

மூன்று பண்புகளின் விளக்கம் என்ன?

அழகு (Beauty) : அழகு அவரவரது கண் பார்வையைப் பொறுத்தது. இன்று இருக்கும் டிசைன் நாளை இருப்பதில்லை. வரம்பற்ற கற்பனைக்கு இடமாக்கித் தன்னை வெவ்வேறு விதத்தில் கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ளும் கல்லே அழகுக் கல்!

நீடித்திருக்கும் தன்மை (Durability) : நிறைய விலையைக் கொடுத்து வாங்கி பெருமையுடன் அதை அணியும் போது அது நீடித்திருக்கிறதா அல்லது உடனே மங்கி தன் தன்மையை இழந்து அழிகிறதா என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லும் கல்லே நீடித்திருக்கும் கல்.

அரிதாகவே கிடைப்பது (Rarity) : தனது பெருமையை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர் இது கிடைக்கவே கிடைக்காத ஒன்று என்று சொல்லும் போது அவர் அடையும் கர்வமும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காதது.

Saturday, 24 February 2024

அணிய வேண்டிய ருத்ராட்சங்களும் 27 நட்சத்திரங்களும்

அஸ்வினி - ஒன்பது முகம். 
பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம். கார்த்திகை - பனிரெண்டு முகம். ரோகிணி - இரண்டு முகம். 
மிருக சீரிஷம் - மூன்று முகம். திருவாதிரை - எட்டு முகம். 
புனர்பூசம் - ஐந்து முகம். 
பூசம் - ஏழு முகம். 
ஆயில்யம் - நான்கு முகம். 
மகம் - ஒன்பது முகம்.  
பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
உத்திரம் - பனிரெண்டு முகம். ஹஸ்தம் - இரண்டு முகம். சித்திரை - மூன்று முகம். சுவாதி - எட்டு முகம். விசாகம் - ஐந்து முகம். அனுஷம்  - ஏழு முகம். கேட்டை - நான்கு முகம். மூலம் - ஒன்பது முகம். பூராடம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
உத்திராடம் - பனிரெண்டு முகம். திருவோணம் - இரண்டு முகம். 
அவிட்டம் - மூன்று முகம். 
சதயம் - எட்டு முகம். 
பூரட்டாதி - ஐந்து முகம்.  
உத்திரட்டாதி - ஏழு முகம். 
ரேவதி - நான்கு முகம்.

Sunday, 11 February 2024

ஆயுளை அதிகரிக்க அணிய வேண்டிய அதிர்ஷ்ட ரத்தினங்கள்

மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது. குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை உடனே குணப்படுத்தும்.

முத்து மன சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும். வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.

மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும். துர்த்தேவதைகளை விலகச் செய்யும்.

புஷ்பராகம் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும்.

வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில் உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.

நீலக்கல்,  ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இருவகைப் படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.

கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

வைடூரியம் வாழ்வில் ஏற்படும் பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது

Monday, 26 December 2022

கருங்காலி மாலை

#கருங்காலி_மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

* ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை.

* இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.

* நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.

* சகோதர் பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும். இல்லறம் நல்லறமாக அமைய அனைவரும் அணிந்து பயன்பெறுவோமாக. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும்.

* நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.

* மந்திர ஜபம் செய்ய சிறந்த மாலையாகும். துர்கை, காளி, வாராஹி, பைரவர் போன்ற தெய்வங்களின் அருள் பெற இந்த மாலையைக் கொண்டு ஜபம் செய்ய பலன் நிச்சயம் கிடைக்கும்.

* ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

* வியாபார தொழில் போட்டிகளில் 
வெற்றி கிட்டும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.

* கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். 
நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும்
தேவைப்படுவோர் தொடர்புக்கு -9962666019

Tuesday, 13 December 2022

ரசமணிகள்



ரசமணி என்பதை பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் 
பாதரசம் எனும் உலோகத்தை
  " பற்றி " அறிந்துக் கொள்வது
நலம் ஆகும்...

பூமாதேவியின் கற்பத்தில் உற்பத்தியாகும் தாதுக்களில் இருந்து கிடைக்கும் உலோகங்களில் மிக உன்னதமான உலோகம் பாதரசம் ஆகும்.

இது பூமியிலிருந்து கிடைக்கும்
 " லிங்கம் " எனும் தாது உப்பில் மறைந்து கலந்து உள்ளதே 
சுக்கில ரசம் ஆகும். 

இந்த ரசமானது மற்ற உலோகங்களை விட
 மிக மிக குறைந்த வெப்பத்தில் உருகு நிலையை அடையக்கூடிய தன்மை கொண்டது ஆகும்.

குறைந்த வெப்பநிலையில் உருகி   திரவ நிலையில் உள்ள பாதரசத்தை
குறிப்பிட்ட சில சூட்சும வழிமுறைகள் மூலம்  திட நிலைக்கு கொண்டுவந்து
மணியாக செய்து அணிவது
காய சித்திக்கும்  , 
ஆன்ம மேம்படலுக்கும், 
ஆன்மிக சாதனைகள் புரியவும்    மிக்க நலமென சித்தர்களும் , முநிகளும் , ரிஷிகளும் , மஹாபுருஷர்களும் 
பல்வித கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ளனர் 

தங்கம் , வெள்ளி  , தாமிரம் முதலான அனைத்து உலோகங்களை விடவும் , நவரத்தினங்கள் , உபரத்தினங்கள் , 
விருட்ச உபகரணங்கள் ஆகியவற்றை விடவும் 
மிக அதிகஅளவில் 
பிரபஞ்ச பேராற்றலை 
உள்வாங்கி சேமித்து வைத்து தேவைக்கேற்ப வெளிபடுத்தவல்லது பாதரசம் ஆகும்.

மேன்மை மிக்க பாதரசத்தை 
மந்திர , தந்திர , யந்திர , ஜோதிஷ , வாஸ்து , ஆகம , சில்ப , சகுன ,. 
சஸ்திர , அஸ்திர  விதிகளுக்கு உட்பட்டு 
பல்வித உபாயங்களில் பயன்படுத்தலாம்..

முற்பிறவி  கர்ம வினைகளின் 
கட்டு மட்டுப்படவும் ,..

பித்ரு , மாத்ரு , பசு , விருட்ச , சர்ப, பூத , பிரேத முதலான இன்னபிற இனமறியா சாபங்களின் வீரியத்தை குறைக்கவும்..

 கர்த்தாவின்  ஜாதகத்தை ஆராய்ந்து 
அதற்கான பிரத்யேக வழிமுறையில் ரசவாத பிரயோகம் செய்து உபயோகப்படுத்தினால்

கர்த்தாவானவன் விரும்பும் இலக்கை அடைய தேவையான பிரபஞ்ச சக்தியை ஏற்படுத்தி கொடுக்கும் என்பது நிதர்சனம்,...

மேலும் விபரங்கள் அறிய  தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொள்ளவும்
Dr.s. vasantharaj -BAJM,LLB,DCA,DTC,JAP,GS,Gem&Num
9962666019
அழைக்கவும்.
.
.

Friday, 18 November 2022

170 காரட் எடையுடன் பூமியின் மிக அரிய வகை வைரம் கண்டுபிடிப்பு.!

இந்த பிங்க் நிற லுலோ ரோஸ் வைரம் சுமார் 170 காரட் எடையுடன், ஆப்பிரிக்கா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அரிய மற்றும் மிகப்பெரிய பிங்க் நிற வைரம் இதுவாகும். லூகாபா வைர நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சுரங்கத்தில் இருந்து இது கண்டுபிடிக்கபட்டுள்ளது

Friday, 28 October 2022

ஜம்பொன் காப்பு

ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக
 வைக்கும்,உடலினை குளிர்ச்சி படுத்தும்,ராஜ உறுப்புகளான இதயம் ,மூளை,நுரையீரல் ,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் ,இதன் அறிவியல் விளக்கத்தை காண்போம்
மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.
இந்த பகுதிகளில் ஐம்பொன்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும்

பஞ்சலோகம் காப்பு கிடைக்கும்
பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம்.
தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

இதில் தங்கம் குருவின் சக்தியையும்,

வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,

செம்பு சூரியனின் சக்தியையும்,

இரும்பு சனியின் சக்தியையும்,

ஈயம் கேதுவின் சக்தியையும்.

ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.

நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன்  உலோக காப்பு  உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம்  காப்பு அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது.

நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது.

வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என்பது தெரிந்த ஒன்றே.

பொதுவாக அனைவரும் தங்கம் ,வெள்ளியில் நகைகள் அணிவது தான்வழக்கம்.

இதிலுள்ள உட்கருத்துக்கள் என்னவெனில் அந்த உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்...
இது மட்டும் போதுமா..
பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது உடலுக்கு பெரும் பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட  மணிக்கட்டு 

இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.

ஐம்பொன்னால் ஆன  காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி.

இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .இராஜ உறுப்புகளான இதயம் ,

மூளை ,நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும். இரத்த கொதிப்பை சீராக்கும்.
கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.