Thursday, 29 February 2024

வளர்ச்சி தரும் வைரம்

Beauty, Durability, Rarity  – அழகு, நீடித்திருக்கும் தன்மை, அரிதாகவே கிடைப்பது – ஆக இந்த மூன்று பண்புகளும் இருந்தால் அந்தக் கல்லை அரிய கல் என்று கூறலாம் என மேலை நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது நூல்களோ இன்னும் ஒரு பண்பைச் சேர்க்கிறது.

Usablility – பயன்மை; அது வாழ்க்கைக்கு உதவுகிறதா என்று பார் என்கிறது!

மூன்று பண்புகளின் விளக்கம் என்ன?

அழகு (Beauty) : அழகு அவரவரது கண் பார்வையைப் பொறுத்தது. இன்று இருக்கும் டிசைன் நாளை இருப்பதில்லை. வரம்பற்ற கற்பனைக்கு இடமாக்கித் தன்னை வெவ்வேறு விதத்தில் கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ளும் கல்லே அழகுக் கல்!

நீடித்திருக்கும் தன்மை (Durability) : நிறைய விலையைக் கொடுத்து வாங்கி பெருமையுடன் அதை அணியும் போது அது நீடித்திருக்கிறதா அல்லது உடனே மங்கி தன் தன்மையை இழந்து அழிகிறதா என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லும் கல்லே நீடித்திருக்கும் கல்.

அரிதாகவே கிடைப்பது (Rarity) : தனது பெருமையை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர் இது கிடைக்கவே கிடைக்காத ஒன்று என்று சொல்லும் போது அவர் அடையும் கர்வமும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காதது.

No comments:

Post a Comment