ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது.
ரோடியம் பிளேட்டிங் முறையின் சிறப்பம்சம்
ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது. தேய்மானம் ஏற்படாது என்பதுடன் ஒளிபாய்ச்சும் தன்மையும் நகைகளில் ஏற்பட உதவி புரிகிறது. ஏனெனில் ரோடியம் ஒளி வீசும் உலோகம் என்பதால் இந்த ரோடியம் பிளேட்டட் செய்யப்பட்ட நகைகள் கீறல் பாதுகாப்பு திறன் கொண்ட நகையாக உள்ளன.
ரோடியம் பிளேட்டிங் என்பது வெள்ளி நிறமுடைய நகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது வெள்ளி நகைகள், வெள்ளை தங்கம், பிளாட்டினம் மற்றும் பல்லடியம் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோடியம் பிளேட்டிங் என்பதின் தடிமன் 0.75 முதல் 1.0 மைக்ரோன் அளவுகளில் தான் இருக்கும்.
ரோடியம் என்பது உறுதியானது
ரோடியம் என்பது மிகக்குறைவான அளவில் கிடைக்கக்கூடிய மிக மதிப்பு மிக்க உலோகம். அதாவது தங்கத்தைவிட 10 முதல் 25 மடங்கு விலை மதிப்புமிக்கது. ரோடியம் என்பது பிளாட்டினம் வகை உலோகத்துடன் சார்ந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வெள்ளி நிறத்தில், அதிகபட்ச ஒளிரும் தன்மையுடன் உள்ளது. ரோடியம் என்பது சுலபமாக ஒரு வடிவத்திற்கு கொண்டு வரமுடியாத உலோகம். அதனால் இதனை கொண்டு நகைகள் செய்வதில்லை. அதன் காரணமாகவே பிற நகைகள் மீது ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்டு அதனை மேம்படுத்த உதவுகிறது.
ரோடியம் பிளேட்டிங் மிக பாதுகாப்பானது
ரோடியம் பிளேட்டிங் என்பது மிக பாதுகாப்பானது. இதன் மேம்பட்ட ஒவ்வாமை தன்மை என்பதன் மூலம் அணிபவரின் தோல் பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாது. ரோடியம் என்பது நிக்கல் போன்று எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. பிற நகைகளால் ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பினும் ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்ட நகைகள் அணிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.
ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை
ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை என்பது எலக்ட்ரோ பிளேட்டிங் முறையில் செய்யப்படுகிறது. இதற்கு முன் ரோடியத்தில் உள்ள கசடுகளை நீக்கிட வேண்டும். டிஸ்லிட் வாட்டர், நீராவி முறை மற்றும் எலக்ட்ரோ கிளினிங் முறையில் ரோடியம் சுத்தம் செய்யப்படுகிறது. எலக்டிரிகல் சார்ஜ் மூலம் குறைவான வெப்ப அளவில் மட்டுமே பிளேட்டிங் செய்ய வேண்டும். அதிக படியான வெப்ப அளவில் பிளேட்டிங் செய்தால் ரோடியம் கருப்பு நிறமாக மாறிவிடும்.
ரத்தின கற்கள் வைத்த நகையில் ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது. அதாவது முத்து, தோப்பிஸ், பவளம், ஓபல், மாணிக்க மரகத கற்கள் பதித்த நகைகளில் ரோடியம் பிளேட்டிங் செய்யும் போது அதிலுள்ள சல்பரிக் ஆசிட் என்பது கற்களை பாதிப்படைய செய்யும். எனவே ரத்தின கற்கள் பதியப்பட்ட நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது.
தங்க நகைகளில் ரோடியம் பிளேட்டிங்
தங்க நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது நடைமுறையில் உள்ளது. அதாவது மஞ்சள் நிறமான தங்க நகையின் மீது வெள்ளை நிறத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடியம் பிளேட்டிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்க நகை கூடுதல் அழகு மற்றும் இரட்டை வண்ண சாயல் கொண்ட வகையிலான நகை அமைப்பை தருகின்றது.
ரோடியம் பிளேட்டிங் என்பது அதிக நாட்கள் நீடிக்கிறது. அதாவது குறைந்த பட்சம் சில வருடங்கள் மட்டுமே அதன் மேற்பூச்சு நிலைத்து இருக்கும். அதிகமான பயன்படுகின்ற நகைகளில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் மட்டுமே ரோடியம் பிளேட்டிங் நிலைத்து இருக்கும்.
விலை அதிகமான ரோடியம் பிளேட்டிங்
ரோடியம் பிளேட்டிங் என்பது மிக அதிகமான விலை மதிப்பில் நிகழ்த்தப்படுகிறது. அதாவது விலைமதிப்புமிக்க ரோடியத்தை கொண்டு இப்பணி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது ரோடியம் பிளேட்டிங் செய்யப்படும் நகை அளவு, அதற்கென பயன்படுத்தப்பட்ட உலோக எடை போன்றவற்றை கணக்கிட்டே அதற்கு விலை நிர்ணயம் அமைகிறது. எனவே எந்த அளவு ரோடியம் பூச்சு செய்யப்பட்டது என்பதை அறிய அந்த நகையுடன் அதன் அளவு குறிப்பிட்ட அட்டை நகையோடு இணைந்தும் கிடைக்கின்றது. பளபளப்பான ரோடியம் பிளேட்டிங் சற்று விலை அதிகமானது என்றாலும் அது பூசப்பட்ட நகைகள் வரவும் அதிகரித்துள்ளது.
நன்றி
© Malar Publications (P) Ltd
No comments:
Post a Comment