Friday, 21 January 2022

இரிடியம் என்றால் என்ன?

தற்காலத்தில் அதிகமானவர்களால் தேடப்படும் விலைமதிப்பான பொருளான #இருடியம் பற்றிய குறிப்புகள் அதன் விளக்கமும்.

 இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்டால் இந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிக அளவிலான உஷ்ணத்தை தாங்கக்கூடிய கதிரியக்கம் கூடிய அபூர்வ  உலோகம்.

இதன் உருகுநிலை 2466 ° செல்சியஸ் (39 டிகிரி செல்சியஸ் 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கு சமம்) என்ற உயர்ந்த அளவில் இருப்பதால், இது உயர் வெப்பநிலையில் இயங்க வேண்டியிருக்கும் கருவிகளில் பயன்படுகின்றது. இரிடியம் இயற்கையில் பிளாட்டினம், அசுமியம் ஆகியவற்றுடன் சேர்ந்த கலவையாகக் கிடைக்கின்றது. இது அதிகம் அரிதான பொருட்களில் ஒன்று.

ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நில உருண்டையின் மீது ஒரு பெரிய விண்கல் வந்து மோதியதாகவும் அந்த விண்கல்லில் இந்த இரிடியம் கூடுதலான விகிதத்தில் இருந்ததாகவும் கருதப்படுகின்றது. லத்தீன் மொழியில் இதற்கு வானவில் என்ற அர்த்தம் உண்டு.

எங்கு கிடைக்கிறது? 
அதன் தன்மை என்ன?

இந்த இரிடியம் எளிதாக பூமியில் கிடைப்பதில்லை. பிளாட்டினம் கிடைத்தாலும், அதில் 1000-ல் ஒரு பங்கு மட்டுமே இரிடியம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 3 டன்கள் மட்டுமே இரிடியம் பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது.

இதனால், கிடைப்பதற்கரிய இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் அமோக வரவேற்பு பல்லாயிரம் கோடிக்கு  இருக்கிறது. தாமிர கனிமத்திலிருந்தும் இந்த இரிடியம் கிடைக்கிறது. பல நூறு ஆண்டுகள் பழைமையான தாமிரத்தில், இரிடியம் கலந்திருக்கிறது.

இவற்றை உருக்கும்போது, 361 டிகிரி பாரன்ஹீட்டுக்கு தாமிரம் பிரியும். அடுத்து 2,645 டிகிரி பாரன்ஹீட்டில் நிக்கல் பிரியும். மீதமிருப்பவை இரிடியம் மட்டுமே. இவ்வாறு உருக்கப்பட்டு, சேகரிக்கப்படும் இரிடியம், உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம்   கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர். இதற்காக உள்ளூர் முதல் உலக அளவில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது.

இதன் மதிப்பு எவ்வளவு? 
எதற்கு பயன்படுத்துகிறார்கள்?

ஒரு கிலோ இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் கிடைக்கும் விலை சுமார் ரூ.500 கோடிக்கும்  மேல். இரிடியத்தை 4,471 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் மட்டுமே உருக்க முடியும். அவ்வளவு கடினமான வெப்பத்தையும் தாங்கும் திறன் இதற்கு உண்டு.

தொடக்கத்தில் பேனா முனைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது செயற்கைக் கோள்களின் வெளிப்புறத்தில் இந்த இரிடியம் கனிமம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரானிக் இயந்திரங்கள், போர் விமானங்களின் என்ஜின் பாகங்களில் கலப்பது எனப் பல்வேறு பயன்பாடுகளுக்கு இரிடியம் பயன்படுகிறது.

இப்படி சக்தி கொண்ட  அரிதான உலோகத்தை எப்படி மோசடிக்கு பயன்படுத்துகிறார்கள்?

அரிதான எந்த பொருளுக்கும் எப்போதும் கிராக்கி உண்டு. அதனுடன் மக்களின் நம்பிக்கையை இணைத்து ஆசையை தூண்டினால், அங்குதான் பிறக்கிறது இரிடியம் மோசடி. சதுரங்க வேட்டை என்ற தமிழ்ப் படம் ஒன்றில் இதை அழகாக கூறியிருப்பார்கள். மனிதன் ஆசையில் தான் மோசடி பேர்வழிகளே உருவாகிறார்கள்.

அரிதான இந்த உலோகத்துக்கு ஆன்மீக துறையில்  பணம் படைத்தவர்களை, விஐபிக்களை மோசடி கும்பல் எளிதாக ஏமாற்றி விடுகிறது. எப்படி ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் பார்ப்போம்.

பல்லாயிரம் வருடம் பழமையான கோயில்களில் உள்ள  கலசங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இடி மின்னல் போன்ற காலநிலை மாற்றங்களின் போது பல இரசாயன மாற்றங்கள் நடைபெற்று  ஒருவித சக்தி உற்பத்தியாகிறது.  இதனால் தான்  கோபுரகலசத்தின் நீர் பாவங்களை போக்கும் நன்மை தரும், நோய் தீர்க்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது வேதங்களில்....

இது தவிர பண்டைய காலத்தில் கோவிலில் அமைக்கப்பட்ட கலசங்களில் இருடியம் தாமிரம் கலந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கலசங்களை குறி வைத்தும் மோசடி கும்பல் இன்றும் இயங்குகிறது. தமிழக கோயில்களில் திருடப்படும் கலசங்கள், அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இரிடியம் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதில் இருக்கும் இரிடியத்தின் சதவீதத்துக்கு ஏற்ப கலசத்துக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நம்பிக்கையை மோசடி பேர்வழிகள் பயன்படுத்தி காசு பார்க்கின்றனர்?

கோவிலில் ஆயிரக்கணக்கான முறை உச்சரிக்கிற மந்திரங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறி கோவில் கலசத்தை அடையும். இப்படிப்பட்ட சக்தி கொண்ட கலசத்தை லட்சக்கணக்கான வோல்டேஜ் சக்திக் கொண்ட இடி மின்னல் தாக்கும் போது அதன் சக்தி உச்சம் பெறும்.

அப்போது அது இரிடியமாக மாறுகிறது. அப்படி மாறிய சக்தி மிக்க கலசத்தை, அல்லது அந்த தகட்டை வைத்திருக்கிறவர்கள் மிகப்பெரிய வசதி, தேக ஆரோக்கியம் , நாட்டையே ஆளும் வல்லமை கிடைக்கும் என்ற நம்பிக்கை, நினைத்தது நடக்கும் என்ற எண்ணம் இன்று வரை பல இடங்களில் நம்பப்படுகிறது.

சதுரங்க வேட்டை என்ற படத்தில் இந்த மோசடி பற்றி விரிவாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

இது போன்ற எத்தனையோ பொக்கிஷ ரகசியங்களை இந்த பூமி இன்றும் மறைத்து வைத்துள்ளது. காலம் தான் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்.....

No comments:

Post a Comment