Thursday, 29 February 2024

வளர்ச்சி தரும் வைரம்

Beauty, Durability, Rarity  – அழகு, நீடித்திருக்கும் தன்மை, அரிதாகவே கிடைப்பது – ஆக இந்த மூன்று பண்புகளும் இருந்தால் அந்தக் கல்லை அரிய கல் என்று கூறலாம் என மேலை நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது நூல்களோ இன்னும் ஒரு பண்பைச் சேர்க்கிறது.

Usablility – பயன்மை; அது வாழ்க்கைக்கு உதவுகிறதா என்று பார் என்கிறது!

மூன்று பண்புகளின் விளக்கம் என்ன?

அழகு (Beauty) : அழகு அவரவரது கண் பார்வையைப் பொறுத்தது. இன்று இருக்கும் டிசைன் நாளை இருப்பதில்லை. வரம்பற்ற கற்பனைக்கு இடமாக்கித் தன்னை வெவ்வேறு விதத்தில் கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ளும் கல்லே அழகுக் கல்!

நீடித்திருக்கும் தன்மை (Durability) : நிறைய விலையைக் கொடுத்து வாங்கி பெருமையுடன் அதை அணியும் போது அது நீடித்திருக்கிறதா அல்லது உடனே மங்கி தன் தன்மையை இழந்து அழிகிறதா என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லும் கல்லே நீடித்திருக்கும் கல்.

அரிதாகவே கிடைப்பது (Rarity) : தனது பெருமையை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர் இது கிடைக்கவே கிடைக்காத ஒன்று என்று சொல்லும் போது அவர் அடையும் கர்வமும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காதது.

Saturday, 24 February 2024

அணிய வேண்டிய ருத்ராட்சங்களும் 27 நட்சத்திரங்களும்

அஸ்வினி - ஒன்பது முகம். 
பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம். கார்த்திகை - பனிரெண்டு முகம். ரோகிணி - இரண்டு முகம். 
மிருக சீரிஷம் - மூன்று முகம். திருவாதிரை - எட்டு முகம். 
புனர்பூசம் - ஐந்து முகம். 
பூசம் - ஏழு முகம். 
ஆயில்யம் - நான்கு முகம். 
மகம் - ஒன்பது முகம்.  
பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
உத்திரம் - பனிரெண்டு முகம். ஹஸ்தம் - இரண்டு முகம். சித்திரை - மூன்று முகம். சுவாதி - எட்டு முகம். விசாகம் - ஐந்து முகம். அனுஷம்  - ஏழு முகம். கேட்டை - நான்கு முகம். மூலம் - ஒன்பது முகம். பூராடம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
உத்திராடம் - பனிரெண்டு முகம். திருவோணம் - இரண்டு முகம். 
அவிட்டம் - மூன்று முகம். 
சதயம் - எட்டு முகம். 
பூரட்டாதி - ஐந்து முகம்.  
உத்திரட்டாதி - ஏழு முகம். 
ரேவதி - நான்கு முகம்.

Sunday, 11 February 2024

ஆயுளை அதிகரிக்க அணிய வேண்டிய அதிர்ஷ்ட ரத்தினங்கள்

மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது. குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை உடனே குணப்படுத்தும்.

முத்து மன சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும். வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.

மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும். துர்த்தேவதைகளை விலகச் செய்யும்.

புஷ்பராகம் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும்.

வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில் உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.

நீலக்கல்,  ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இருவகைப் படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.

கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

வைடூரியம் வாழ்வில் ஏற்படும் பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது