Monday, 25 February 2019

தங்கம் வெள்ளி பாத்திரங்கள் பருகும் நீரே விலை உயர்ந்த நீர்

விலை உயர்ந்த நீர் இதுவே..!
எந்த ஒரு பொருள் நமது உடலுக்கு அதிக நன்மையை தருகிறதோ அதுவே அதிக விலை உயர்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் நமது உயிரை விட எதுவும் பெரிதானதாக இந்த உலகில் இல்லை என்பதே நிதர்சனம். அந்த வகையில் தங்கம், வெள்ளி மற்றும் தாமிர பாத்திரங்களில் நீர் குடித்தால் அது உடலில் எந்த ஒரு நோயும் அண்டாமல் தடுக்கும். அதனால்தான், இதனை விலையுயர்ந்த நீராக கருதுகின்றனர்.

வெள்ளியும் தாமிரமும்!

எவ்வாறு தங்கம் உடலுக்கு நலனை தருகிறதோ அதே போன்று தான் இந்த வெள்ளியும். பல ஆயுர்வேத மருத்துவத்தில் வெள்ளி மற்றும் தாமிர பொருட்களையே பெரிதும் பயண்படுத்துவர் இது உடலுக்கு நல்ல விதமான ஆற்றலையும் சூழலையும் தரும் அந்த காலத்து மன்னர்கள் கூட எப்போதும் இந்த விலைஉயர்ந்த தங்க வெள்ளி பாத்திரங்களிளே

தங்கத்தால் ஆன சாப்பாடு!

ஐதராபாத்தில் திருமண சாப்பாட்டு பந்தியின் போது தங்கத்தில் உணவு தயாாித்து சமயைல் கலைஞா் ஒருவா் சாதனை படைத்துள்ளாா்.
ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும் போது உருகிவிடுகிறது.

இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் தீங்கில்லாததாகும். இது வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாகும்.
தங்க நிற இலைகள் மற்றும் வெள்ளி இலைகளில் போா்த்தப்பட்ட இனிப்புகளை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். அப்படியிருக்கையில், நான் அதனை தங்க நிற அரிசியாக மாற்ற முயற்சித்தேன், தங்க இலையை சூடான வேகவைத்த சாப்பாட்டின் மீது வைத்தால் உருகும் என்பதால் இதனை முயற்சித்தேன், தற்போது இது நன்றாக வேலை செய்கிறது என இதனை தயாரித்த சமையற் கலைஞர் சாய் ராதா ​ கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.https://youtu.be/7qOIYyAZZJE

Thursday, 21 February 2019

70கிலோ கிராம் எடையுள்ள மனித உடலும் அதில் உள்ள 58தனிமங்களும்

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலும் அதில் உள்ள மூலப் பொருளும் 58 தனிமங்களும்
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மேலும் நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!

Monday, 18 February 2019

யார் வேண்டுமானாலும் அணியலாம் படிகமாலை

ஸ்படிகம் என்றால் என்ன?

  பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவதனால் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர்மறை எண்ணங்களை ஸ்படிக லிங்கம் தன்பால் ஈர்த்துக் கொள்ளும்.

 ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.  ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது.  உடல் சூட்டை  சீரான. சரியான அளவில் சீராக்கும்.

 2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு  அழைத்து செல்லும். ரத்த  கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

 நமது உடல்  சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு  இணையாக. வேறு எதற்க்கும்  இல்லை.

 ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.
ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.

ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.

தெய்வ  பக்த்தி  உள்ளவர்கள்.  108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து.  உங்களுக்கு பிடித்த இறைவனின்  பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு  தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.

 அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே.  அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

 நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட  வேண்டும்.  அமைதியான அதிகாலை வேளை  தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.

 இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி  செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

 ஸ்படிக மாலை அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

 1]ஸ்படிக மாலை  அணிவதர்க்கு  என்று ஏதேனும் அடிப்படை  தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.

 ஏற்கனவே.  மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த  புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு  மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

பிளாட்டினம் பூமியாக மாறுகிறது தமிழகம்

சொர்க்க வாசல் திறக்கிறது.  பிளாட்டினம் பூமியாக மாறுகிறது தமிழகம்.  ( விலை மதிப்பற்ற தகவல் ) - தேங்க்ஸ் INDIAN CONSTITUTION - THIS IS A SHARED INFO FROM INDIAN CONSTITUTION.

பிளாட்டினம் பூமி - பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்!
விரைவில் புதிய சுரங்கம் ஏலம்..
தமிழகத்தில், விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகம் கிடைக்கும் இடத்தை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அந்தச் சுரங்கம் உட்பட, பல உலோகங்கள் கிடைக்கும், ஐந்து சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன.
இந்திய நில அளவை துறையினர், தமிழகத்தின் பல இடங்களில், பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்வான பிளாட்டினம் என்ற உலோக பொருள் படிமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
துறைப்பாடியில்..இதுகுறித்து, இந்திய நில அளவை துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 10 புதிய கனிம சுரங்கங்களை கண்டறிந்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதில், * திருவண்ணாமலை மாவட்டம், துறைப்பாடியில், 110 மீட்டர் ஆழத்தில் பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது
* திருப்பூர் மாவட்டம், திருமாங்காரடு பகுதியில், இரும்புக்கல்
* ராசிபுரம் அருகே சாம்பல்பட்டியில், அரிய வகை உலோகம்
* திருச்செங்கோடு, சங்ககிரியில், கிரானைட்
* நாமக்கல்லில், 'நிக்கல், குரோமியம், மேக்னசைட்' தாதுக்கள் கிடைப்பதை கண்டறிந்தோம். இந்த, ஐந்து சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதனால், அவற்றை ஏலத்தில் விடும்படி, தமிழக அரசுக்கு மத்திய அரசு தகவல் தெரிவிக்கும். நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டியில் பிளாட்டினம் கிடைத்தாலும், மேற்கண்ட இடங்களில், தலா, 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கனிமங்கள் கிடைப்பதால், அவை முதலில் ஏலம் விடப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'தமிழகத்தில், 10 சுரங்கங்கள் உட்பட, நாட்டில், 100 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அது பற்றி, தமிழக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகளை கேட்ட போது அவர்கள் கூறியதாவது: 'லீஸ்' கிடையாது:இங்கு, 'மாலிப்டினம்' என்ற உலோகம் கிடைப்பதும் உறுதியாகிஉள்ளது. ஆனால், எந்த உலோக சுரங்கங்களை ஏலம் விடுவது என்பது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்யும். இதுவரை, நாம், 'லீஸ்' அடிப்படையில் சுரங்கங்களை கொடுத்து வந்தோம். இனி, அந்த நடைமுறை இருக்காது.
கடந்த, 2015ல் திருத்தப்பட்ட சுரங்கம் மற்றும் கனிம
சட்டப்படி, இனி கனிம சுரங்கங்களை, ஏலத்தில் மட்டுமே விட வேண்டும். ஆனால், ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயன் என்ன? :பிளாட்டினம், தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்ந்தது. இது, 'வெள்ளை தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதை எந்த வடிவத்திலும் வார்க்க முடியும். கோடீஸ்வரர்கள், திரையுலக நட்சத்திரங்கள், 'மாடலிங்' மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள், தங்கத்தைக் காட்டிலும் பிளாட்டி னம் பயன்படுத்துவதையே விரும்பு கின்றனர்.
ஆபரணங்கள் தயாரிப்பு தவிர்த்து, ரசாயன ஆலைகள், மருத்துவம், பல் மருத்துவம், 'ஏரோஸ்பேஸ்' உள்ளிட்ட பல துறைகளிலும், பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

நவரத்தினபட்டு

கஷ்டப்"பட்டு".

2007 ஆம் ஆண்டு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் தங்களுடைய காஞ்சிபுரம் பட்டு நெசவாலையில் 30 பணியாளர்களைக் கொண்டு, 4780 மணிநேரம் வேலை செய்து, 7 மாதத்தில், 8 கிலோ எடையுள்ள பட்டுப்புடவையை தயாரித்தனர். எதற்கு என்கிரீர்களா? கணவன்மார்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளத்தான். அதில் அப்படி என்ன விசேஷம்.

தங்கம் - 59.கிராம் 700 மி. கிராம்.
வைரம் - 3 காரட் 913 சென்ட்.
பிளாட்டினம் - 120 மி. கிராம்.
வெள்ளி - 5 கிராம்.
மாணிக்கம் - 2காரட் 985 சென்ட்.
மரகதம் - 55 சென்ட்.
கனக புஷ்பராகம் - 3 சென்ட்.
நீலக்கல் - 5 காரட்.
வைடூரியம் - 14 சென்ட்.
புஷ்பராகம் - 10 சென்ட்.
பவளம் - 400 மி. கிராம்.
முத்து - 2 கிராம்.

என நவரத்தினங்களோடு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சேர்த்து கஷ்ட"பட்டு" தயாரித்திருந்தனர். சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த புடவையின் முத்தணையில் ரவிவர்மாவின் புகழ்பெற்ற "Galaxy of Musician" ஓவியம் வரையப்பட்டிருந்தது. 2008 ஆண்டு இந்த புடவையை கின்னஸ் வேல்டு ரெக்கார்டில் உலகின் விலை உயர்ந்த புடைவை என பதிவு செய்தனர். இதுவே உலகின் விலையுயர்ந்த புடவையாகும். அப்படி என்ன? பெரிய புடலங்காய் விலை என்றால், வெறும் 3931627 மட்டுமே. என்ன? மூச்சு வாங்குகிறதா.