Monday, 25 February 2019

தங்கத்தால் ஆன சாப்பாடு!

ஐதராபாத்தில் திருமண சாப்பாட்டு பந்தியின் போது தங்கத்தில் உணவு தயாாித்து சமயைல் கலைஞா் ஒருவா் சாதனை படைத்துள்ளாா்.
ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும் போது உருகிவிடுகிறது.

இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் தீங்கில்லாததாகும். இது வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாகும்.
தங்க நிற இலைகள் மற்றும் வெள்ளி இலைகளில் போா்த்தப்பட்ட இனிப்புகளை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். அப்படியிருக்கையில், நான் அதனை தங்க நிற அரிசியாக மாற்ற முயற்சித்தேன், தங்க இலையை சூடான வேகவைத்த சாப்பாட்டின் மீது வைத்தால் உருகும் என்பதால் இதனை முயற்சித்தேன், தற்போது இது நன்றாக வேலை செய்கிறது என இதனை தயாரித்த சமையற் கலைஞர் சாய் ராதா ​ கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.https://youtu.be/7qOIYyAZZJE

No comments:

Post a Comment