Monday 18 February 2019

பிளாட்டினம் பூமியாக மாறுகிறது தமிழகம்

சொர்க்க வாசல் திறக்கிறது.  பிளாட்டினம் பூமியாக மாறுகிறது தமிழகம்.  ( விலை மதிப்பற்ற தகவல் ) - தேங்க்ஸ் INDIAN CONSTITUTION - THIS IS A SHARED INFO FROM INDIAN CONSTITUTION.

பிளாட்டினம் பூமி - பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்!
விரைவில் புதிய சுரங்கம் ஏலம்..
தமிழகத்தில், விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகம் கிடைக்கும் இடத்தை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அந்தச் சுரங்கம் உட்பட, பல உலோகங்கள் கிடைக்கும், ஐந்து சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன.
இந்திய நில அளவை துறையினர், தமிழகத்தின் பல இடங்களில், பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்வான பிளாட்டினம் என்ற உலோக பொருள் படிமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
துறைப்பாடியில்..இதுகுறித்து, இந்திய நில அளவை துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 10 புதிய கனிம சுரங்கங்களை கண்டறிந்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதில், * திருவண்ணாமலை மாவட்டம், துறைப்பாடியில், 110 மீட்டர் ஆழத்தில் பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது
* திருப்பூர் மாவட்டம், திருமாங்காரடு பகுதியில், இரும்புக்கல்
* ராசிபுரம் அருகே சாம்பல்பட்டியில், அரிய வகை உலோகம்
* திருச்செங்கோடு, சங்ககிரியில், கிரானைட்
* நாமக்கல்லில், 'நிக்கல், குரோமியம், மேக்னசைட்' தாதுக்கள் கிடைப்பதை கண்டறிந்தோம். இந்த, ஐந்து சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதனால், அவற்றை ஏலத்தில் விடும்படி, தமிழக அரசுக்கு மத்திய அரசு தகவல் தெரிவிக்கும். நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டியில் பிளாட்டினம் கிடைத்தாலும், மேற்கண்ட இடங்களில், தலா, 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கனிமங்கள் கிடைப்பதால், அவை முதலில் ஏலம் விடப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'தமிழகத்தில், 10 சுரங்கங்கள் உட்பட, நாட்டில், 100 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அது பற்றி, தமிழக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகளை கேட்ட போது அவர்கள் கூறியதாவது: 'லீஸ்' கிடையாது:இங்கு, 'மாலிப்டினம்' என்ற உலோகம் கிடைப்பதும் உறுதியாகிஉள்ளது. ஆனால், எந்த உலோக சுரங்கங்களை ஏலம் விடுவது என்பது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்யும். இதுவரை, நாம், 'லீஸ்' அடிப்படையில் சுரங்கங்களை கொடுத்து வந்தோம். இனி, அந்த நடைமுறை இருக்காது.
கடந்த, 2015ல் திருத்தப்பட்ட சுரங்கம் மற்றும் கனிம
சட்டப்படி, இனி கனிம சுரங்கங்களை, ஏலத்தில் மட்டுமே விட வேண்டும். ஆனால், ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயன் என்ன? :பிளாட்டினம், தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்ந்தது. இது, 'வெள்ளை தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதை எந்த வடிவத்திலும் வார்க்க முடியும். கோடீஸ்வரர்கள், திரையுலக நட்சத்திரங்கள், 'மாடலிங்' மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள், தங்கத்தைக் காட்டிலும் பிளாட்டி னம் பயன்படுத்துவதையே விரும்பு கின்றனர்.
ஆபரணங்கள் தயாரிப்பு தவிர்த்து, ரசாயன ஆலைகள், மருத்துவம், பல் மருத்துவம், 'ஏரோஸ்பேஸ்' உள்ளிட்ட பல துறைகளிலும், பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment