Saturday, 9 February 2019

கண்ணாடி மோதிரம் வைரமா?லன்டன் பெண்மனி அதிர்ச்சி68கோடி


 ''வாங்கும் போது ரூ.920, விற்கும் போது ரூ.6.8 கோடி'': இன்ப அதிர்ச்சியில் லண்டன் பெண்மணி
:எங்கேனும் வெளியே சென்றால் நமக்கு பிடித்த எதையாவது வாங்கி வந்துவிடுவோம். அந்த பொருள் நமக்கு எந்த அளவுக்கு பயன்படும்? அதன் தேவை என்ன? என்றெல்லாம் யோசிப்பதில்லை. குறிப்பாக பெண்கள், சாலைகளில் விற்கும் விலை குறைவான கல் மோதிரங்கள், மணி வகைகள் என வாங்கி குவித்து விடுவார்கள். ஆனால் அப்பொருட்களின் தேவை எப்போதாவது தான் இருக்கும். அப்போது தான் அதனை பயன்படுத்துவார்கள். சில பொருட்கள் பயன்படுத்தாமல் அப்படியேவும் கிடக்கும். இதே போல் விளையாட்டாக வாங்கிய ஒரு கண்ணாடி மோதிரத்தால் லண்டன் பெண்மணி ஒருவர் தற்போது கோடீஸ்வரி ஆகியுள்ளார். டெப்ரா காடார்ட் என்ற 55 வயதான பெண்மணி லண்டனில் வசித்து வருகிறார். அவர் 33 வருடங்களுக்கு முன்பு கண்ணாடி மோதிரம் ஒன்றை ஏலம் மாதிரியான விற்பனையின் போது வாங்கியுள்ளார்.
இந்திய மதிப்பில் வெறும் 920 ரூபாய்க்கு வாங்கிய அவர் சிலமுறை பயன்படுத்திவிட்டு அப்படியே வைத்துவிட்டார். தற்போது அவருக்கு பணத்தேவை ஏற்பட, தன்னிடம் உள்ள கல் மற்றும் கண்ணாடி மோதிரங்களை விற்கலாம் என்று யோசித்துள்ளார்.
கண்ணாடி மோதிரத்தை நகைக்கடைக்கு கொண்டு சென்ற டெப்ராவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மோதிரத்தை வாங்கிய நகைக்கடைக்காரர்கள் இந்த மோதிரம் வைரத்தால் ஆனது என்றும் இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 6.8 கோடி என்றும் தெரிவித்துள்ளனர். இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன டெப்ரா, அந்த வைர மோதிரத்தை ஏலமிட திட்டமிட்டுள்ளார். 

No comments:

Post a Comment