Sunday, 17 February 2019

பசுவின் கோமியத்தில் தங்கமா!

பசுவின் கோமியத்தில் தங்கம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
காந்திநகர்:  பசுவின் கோமியத்தில் இருந்து தங்கம் கிடைப்பதாக குஜராத் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஜுனாகாத் வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து  குஜராத்தின் பசு இனமான' கிர்' மாட்டைக் கொண்டு கடந்த  4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். இதில் 400 பசு மாடுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1 லிட்டர் சிறுநீரில்  3 முதல்10 மி.கி  வரை தங்கம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  மாட்டின் வயதைப் பொறுத்து  தங்கம் கிடைக்கும் அளவு மாறுபடுகிறது.  ஆனாலும் அனைத்து வகை கிர் இன பசு மாடுகளின் சிறுநீரிலும் தங்கம் நிச்சயம் இருக்கிறதாம்.
மாலை நேரத்தை விட காலை நேர மாட்டு கோமியத்தில்தான் தங்கம் அதிகளவு கலந்துள்ளதாம்.  வெள்ளி, துத்தநாகம், போரான் உள்ளிட்ட தனிமங்களும் பசு கோமியத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பசுவின்  கோமியத்தில் 5,100 வகையான பொருட்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். அதில் 388 பொருட்கள் மருத்துவ இயல்பு கொண்டவை. குஜராத்தில் தற்போது வெறும் 3,000 கிர் வகை பசுமாடுகள் மட்டுமே உள்ளன.'பஞ்ச கவ்யம்'  எனப்படும் பசு சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய 5 பொருட்களால் செய்யப்படும் கலவையானது  இயற்கை உரமாகக் கருதப்படுகிறது.  பசு சாணத்தில் பாக்டீரியா,  நுண் சத்துகள் அடங்கியுள்ளது.  கோமியத்தில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து இருக்கிறது.  பாலில்  புரதம், கொழுப்பு, மாவு, அமினோ அமிலம், கால்சியம் சத்துக்கள் உள்ளன. தயிர்,  செரிமானத் தன்மையை அதிகரிக்க கூடியது.  நெய்யில்  வைட்டமின் ஏ, பி, கால்சியம், கொழுப்புச் சத்து நிறைந்தது.

வெள்ளி, துத்தநாகம், போரான் உள்ளிட்ட தனிமங்களும் பசு கோமியத்தில் உள்ளதாக ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பசு கோமியத்தில் 5,100 வகையான பொருட்கள் உள்ளதை கண்டறிந்துள்ள ஆய்வறிஞர்கள், அதில் 388 பொருட்கள் மருத்துவ பண்பு கொண்டவை என்றும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மனிதனின் சிறுநீரில் 3,000-க்கும் அதிகமான பொருட்கள் உள்ளதனை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment