Sunday 17 February 2019

எரிமலைக்கு அடியில் தங்கமா!


நியூசிலாந்து எரிமலைகளுக்கு அடியில் தாறுமாறாக புதைந்து கிடக்கும் தங்கம், வெள்ளி!

 நியூசிலாந்து எரிமலைகளுக்கு அடியில் தாறுமாறாக புதைந்து கிடக்கும் தங்கம், வெள்ளி!
உறுதியானது...

ஏற்கனவே இப்பகுதியில் தங்கம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அது தற்போது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும் எவ்வளவு தங்கம் அங்கு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூற இயலவில்லை.

கைக்கு எட்டியது....வாய்க்கு எட்டவில்லை

அதோடு இந்த தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களை வெளியிலும் எடுக்க இயலாத சூழல் உள்ளது. காரணம் எரிமலைகளின் அடியில் இருக்கும் நீர்த்தேக்கங்களில் அதன் கீழ் அடுக்குகளில் உள்ள வெப்பம் ஆகும்.

புதிய உபகரணம்...

ஆயினும் எதிர்காலத்தில் இதற்கென ஒரு சரியான உபகரணம் தயார் செய்தால் ஆண்டுக்கு, 680 முதல் 7500 கிலோ கிராமுக்கு தங்கம் இங்கிருந்து எடுக்க முடியும் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

விலைமதிப்பில்லாத உலோகங்கள்...

இது போன்று எரிமலையின் அடிப்பகுதியில் பூமியின் கீழ் அடுக்கில் உள்ள வெப்பத்தால் பல்லாண்டுகளாக, இதுபோன்ற விலைமதிப்பில்லாத உலோகங்கள் சேர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment