Monday, 20 May 2019

ஆம்பர்

ஆம்பர் (Amber).
மனித குலம் முதன் முதலாக பயன்படுத்த துவங்கிய கல் ஆம்பர், கற்கால மனிதர்கள் ஆம்பர் மற்றும் லாபிஸ் லசூலி (Lapiz Lazuli) கற்களை தாயத்துகளிலும், மாலைகளிலும் கட்டி வைத்து உபயோகப்படுத்தியுள்ளது அகழ்வாராய்ச்சிகளில் சான்று கிடைத்துள்ளது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களில் இருந்து வெளிவரும் பிசின் (Resin) பூமிக்குள் புதைந்து, பூமியின் கீழுள்ள வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் இறுகி, கற்களாக மாறிவிட்டன (நிலக்கரி போல), ஆம்பர் கற்களின் உட்புறத்தில் சிறு பூச்சிகள், வண்டுகள் அல்லது தாவர பாகங்கள் உறைந்து காணப்படும்.
ஆம்பர் பிசினாக இருந்து காலத்தில் அதன் மேல் ஒட்டிக் கொண்டவையே இவை. மேலும் மேலும் அதில் பிசின் படிய, அவை உட்புறத்தில் மாட்டிக் கொண்டன. பின்னர் கற்களாக மாறும்போது இந்த பூச்சிகளும் மம்மிகள் போன்று உள்ளே அழியாது தங்கிவிடுகின்றன.
ஆம்பர் கற்கள் இளம் மஞ்சள் நிறத்திலிருந்து தேன் போன்ற அடர்ந்த மஞ்சள் நிறம் வரையிலுள்ள பல வண்ணங்களில் கிடைக்கின்றன.

தன்மைகளும் பலன்களும்
வாழ்க்கையில் ஒரு நிலைத் தன்மையை உருவாக்கும்
எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நம்பிக்கையை வளர்க்கும்
உடலில் உள்ள நேர்சக்தி, எதிர்சக்திகளை (+/-)  சமநிலைபடுத்தும் ( திருஷ்டி சுற்றுவது போல்).
நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் ஆம்பர் கல்லை வைத்தால் நோயுற்ற இடத்திலுள்ள எதிர்மறையான சக்திகளை (Negative Energy)  உறிஞ்சி அகற்றிவிடும், நோய்களை உடலே குணப்படுத்தி கொள்ள வழிவகுக்கும்.
நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும்
காது நரம்புகளை வலுவாக்கும்
சுவாசக் கோளாறுகளை நீக்கும்
தைராய்ட், மண்ணீரல் ஆகியவற்றின் இயக்கங்களை அதிகரிக்கும்
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் வலுவடையச் செய்யும்
பல்வலி, தலைவலி, தொண்டைவலி ஆகியவற்றை தடுக்கும்

இக்கற்களை மோதிரத்திலோ மாலையிலோ பதித்து பயன்படுத்த கூடாது.

அமீதிஸ்ட்

அமீதிஸ்ட் (Amethyst)
இக்கற்கள் படிகம் (Quartz) குடும்பத்தை சார்ந்தது, ஆழ்ந்த கருநீல வண்ணத்தில்( கத்திரிக்காய் - Indico)  காணப்படும்.

தன்மைகளும் பலன்களும்
ஆன்மீகத்தில் அதிக நட்டம் தரும்.
மூளையோடு நேரடியாக தொடர்பு கொள்ளகூடிய ஒரு ரத்தினமாகும்.
நரம்பு மண்டல செல்களுக்கிடையேயான செய்தி பரிமாற்றத்தை (Transmission of Neural Signals) அமீதிஸ்ட் அதிகரிப்பதாக ஒரு ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி கண்டறிந்துள்ளார்.
மனதையும் மூளையையும் நரம்பு மண்டலத்தையும் உறுதியாக்கும்.
மனதை ஒருமுகப்படுத்தும்
நினைவாற்றலை அதிகரிக்கும்
தியானத்தில் உயர் நிலைகளை அடைய முடியும்.
சிந்தனை, பேச்சு, எழுத்து ஆகியவை தெளிவாகும்,  இவற்றில் ஞானம் மிளிரும்.
கலைத்துறையில் உள்ளவர்கள் (குறிப்பாக ஓவியர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர், எழுத்தாளர்கள்) அமீதிஸ்ட் பயன்படுத்தினால் அவர்களது படைப்புத்திறன் அதிகமாகும். கோபம் ஆத்திரம், பரபரப்பு ஆகியவை அடங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும்.
போதை பழக்கத்திற்கு அடிமையானோர்கள் இக்கற்கள் சற்று அதிக எடையில் பயன்படுத்தினால் அதிலிருந்து திருந்திவிட முடியும்.
குடியினை மறக்க முடியாதவர்களுக்கு இந்த கல்லை அணிவிப்பதின் மூலம் குடிப்பழக்கத்தை விரைவில் விட்டு விடுவார்கள்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை பயன்படுத்த கூடாது, பயணத்தினால் அதிக ஆன்மிக நட்டத்தில் துறவு மேற்கொள்ளும் நிலை ஏற்படும்.
முற்றிய மனநோய் உள்ளவர்கள் அமீதிஸ்ட் அணியக்கூடாது.

அலெக்ஸாண்ட்ரைட்



அலெக்ஸாண்ட்ரைட் (Alexandrite)

நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும், உறுதிப்படுத்தும்.
கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதை அணிந்து கொள்ளலாம்.
பக்கவாதம், சிறுநீரை அடக்க முடியாத தன்மை (Incontinence),  தேவையற்ற பரபரப்பு (hyper activity) போன்ற நோய்கள் உள்ளவர்கள் இதை அணிந்து கொண்டால் பலன் கிடைக்கும்.
மண்ணீரல், கணையம், விரைகள் ஆகியவற்றின் இயக்கங்களை உறுதிப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும்.
ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் இந்த கற்களை அணிந்து பயன் பெறலாம்.
ஆன்மிக அதிர்வுகள் அதிகம் உள்ள கல், ஆன்மிக பாதையில் வளர்ச்சியடைய விரும்புகிறவர்கள் இதை அணிந்து பயன் பெறலாம்.

ஆக்குவாமெரைன்



ஆக்குவா மெரைன் (Aqua marine)

நோய்களை தணிக்கும்.
உடல் சூட்டை குறைக்கும்.
நரம்பு மண்டலம், மூளை ஆகியவற்றை சாந்தப்படுத்தும்.
கண் பார்வை கூர்மையாகும்.
கண் எரிச்சல் அடங்கும்.
உடலில் அசுத்தங்களை வெளியேற்ற உடலை தூய்மைப்படுத்தும்.
கழுத்து, தொண்டை நோய்களை தணிக்கும்.
கல்லிரல், மண்ணிரல், சிறுநீரகங்கள், தைராய்டு சுரப்பிகள் ஆகியவற்றின் செயல்திறனை அதிகரிக்கும்.
சிந்தனை திறனை கொடுக்கும்.
கற்பனை வளம், பேச்சு திறமை ஆகியவை அதிகரிக்கும்.
பிறரோடு அனுசரித்து போகும் தன்மையை கொடுக்கும்.

ரத்தினங்கள்

ரத்தினங்கள்.

ரத்தினங்களில் இரு வகைகள் உண்டு.

1. Precious Stones (நவரத்தினம்).
விலை உயர்ந்த ஜாதி கற்களை இந்த வகையில் கூறுவார்கள்,
அவை
1. மாணிக்கம் (Ruby)
2. முத்து (Pearl)
3. மஞ்சள் புஷ்பராகம் (Yellow sapphire)
4. கோமேதகம் (Hessonite)
5. மரகதம் (Emerald)
6. வைரம் (Diamond)
7. வைடூரியம் (Cat's eye)
8. நீலம் (Blue sapphire)
9. பவளம் (Coral).
இந்த ஒன்பது ரத்தினங்களை தவிர இதர பல ரத்தினங்கள் உண்டு, அவைகளை உபரத்தினங்கள் அல்லது அதிர்ஷ்டக்கற்கள் என்று கூறியுள்ளனர்.

2. Semi-Percious Stones (உபரத்தினம்)
இந்த வகையான ரத்தினங்களில் பல நூற்றுக்கணக்கான கற்கள் உள்ளது, இருப்பினும் 75 வகையான கற்கள் தான் அதிக பயன்பாட்டில் உள்ளது.
அவைகள்.
Agate
Albite
Alexandrite
Amazonite
Amber
Amethyst
Andalusite
Apatite
Aquamarine
Arogonite
Aueturine
Azurite
Beryl Stone
Blood Stone
Byrite Stone
Calcite
Carnelian
Celestine
Chalce dony
Chrysolite
Chrysocolla
Citrine
Fluorite
Garnet
Gold Stone
Hematite
Jade Stone
Jasper Stone
Jet Stone
Jacinth Stone
Kidney Stone
Kunzite
Labradorite
Lapiz Lazuli
Larli
Lime Stone
Load Stone
Magnetite
Malachite
Meteorite
Moon Stone
Morganite
Neeli Stone
Obsidian
Onyx
Opal
Paras Stone
Peridot
Pyrite
Pyrope Garnet
Quartz Stone
Rhodonite
Rock Crystal Stone
Romni Stone
Rutile
Sard Stone
Sardonyx
Serpentine
Smithsonite
Sodalite
Sonamakki Stone
Spinel
Star Ruby Stone
Topaz
Tourmaline
Turquoise
Tiger's eye
White Coral
White Sapphire
Zircon.
இதிலும் 35 வகையான கற்களை மட்டுமே மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது.

Tuesday, 5 March 2019

ரோடியம் பிளேட்டிங்...




 
ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது.

ரோடியம் பிளேட்டிங் முறையின் சிறப்பம்சம்

ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது. தேய்மானம் ஏற்படாது என்பதுடன் ஒளிபாய்ச்சும் தன்மையும் நகைகளில் ஏற்பட உதவி புரிகிறது. ஏனெனில் ரோடியம் ஒளி வீசும் உலோகம் என்பதால் இந்த ரோடியம் பிளேட்டட் செய்யப்பட்ட நகைகள் கீறல் பாதுகாப்பு திறன் கொண்ட நகையாக உள்ளன.

ரோடியம் பிளேட்டிங் என்பது வெள்ளி நிறமுடைய நகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது வெள்ளி நகைகள், வெள்ளை தங்கம், பிளாட்டினம் மற்றும் பல்லடியம் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோடியம் பிளேட்டிங் என்பதின் தடிமன் 0.75 முதல் 1.0 மைக்ரோன் அளவுகளில் தான் இருக்கும்.

ரோடியம் என்பது உறுதியானது

ரோடியம் என்பது மிகக்குறைவான அளவில் கிடைக்கக்கூடிய மிக மதிப்பு மிக்க உலோகம். அதாவது தங்கத்தைவிட 10 முதல் 25 மடங்கு விலை மதிப்புமிக்கது. ரோடியம் என்பது பிளாட்டினம் வகை உலோகத்துடன் சார்ந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வெள்ளி நிறத்தில், அதிகபட்ச ஒளிரும் தன்மையுடன் உள்ளது. ரோடியம் என்பது சுலபமாக ஒரு வடிவத்திற்கு கொண்டு வரமுடியாத உலோகம். அதனால் இதனை கொண்டு நகைகள் செய்வதில்லை. அதன் காரணமாகவே பிற நகைகள் மீது ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்டு அதனை மேம்படுத்த உதவுகிறது.

ரோடியம் பிளேட்டிங் மிக பாதுகாப்பானது

ரோடியம் பிளேட்டிங் என்பது மிக பாதுகாப்பானது. இதன் மேம்பட்ட ஒவ்வாமை தன்மை என்பதன் மூலம் அணிபவரின் தோல் பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாது. ரோடியம் என்பது நிக்கல் போன்று எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. பிற நகைகளால் ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பினும் ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்ட நகைகள் அணிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை

ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை என்பது எலக்ட்ரோ பிளேட்டிங் முறையில் செய்யப்படுகிறது. இதற்கு முன் ரோடியத்தில் உள்ள கசடுகளை நீக்கிட வேண்டும். டிஸ்லிட் வாட்டர், நீராவி முறை மற்றும் எலக்ட்ரோ கிளினிங் முறையில் ரோடியம் சுத்தம் செய்யப்படுகிறது. எலக்டிரிகல் சார்ஜ் மூலம் குறைவான வெப்ப அளவில் மட்டுமே பிளேட்டிங் செய்ய வேண்டும். அதிக படியான வெப்ப அளவில் பிளேட்டிங் செய்தால் ரோடியம் கருப்பு நிறமாக மாறிவிடும்.

ரத்தின கற்கள் வைத்த நகையில் ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது. அதாவது முத்து, தோப்பிஸ், பவளம், ஓபல், மாணிக்க மரகத கற்கள் பதித்த நகைகளில் ரோடியம் பிளேட்டிங் செய்யும் போது அதிலுள்ள சல்பரிக் ஆசிட் என்பது கற்களை பாதிப்படைய செய்யும். எனவே ரத்தின கற்கள் பதியப்பட்ட நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது.

தங்க நகைகளில் ரோடியம் பிளேட்டிங்

தங்க நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது நடைமுறையில் உள்ளது. அதாவது மஞ்சள் நிறமான தங்க நகையின் மீது வெள்ளை நிறத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடியம் பிளேட்டிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்க நகை கூடுதல் அழகு மற்றும் இரட்டை வண்ண சாயல் கொண்ட வகையிலான நகை அமைப்பை தருகின்றது.

ரோடியம் பிளேட்டிங் என்பது அதிக நாட்கள் நீடிக்கிறது. அதாவது குறைந்த பட்சம் சில வருடங்கள் மட்டுமே அதன் மேற்பூச்சு நிலைத்து இருக்கும். அதிகமான பயன்படுகின்ற நகைகளில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் மட்டுமே ரோடியம் பிளேட்டிங் நிலைத்து இருக்கும்.

விலை அதிகமான ரோடியம் பிளேட்டிங்

ரோடியம் பிளேட்டிங் என்பது மிக அதிகமான விலை மதிப்பில் நிகழ்த்தப்படுகிறது. அதாவது விலைமதிப்புமிக்க ரோடியத்தை கொண்டு இப்பணி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது ரோடியம் பிளேட்டிங் செய்யப்படும் நகை அளவு, அதற்கென பயன்படுத்தப்பட்ட உலோக எடை போன்றவற்றை கணக்கிட்டே அதற்கு விலை நிர்ணயம் அமைகிறது. எனவே எந்த அளவு ரோடியம் பூச்சு செய்யப்பட்டது என்பதை அறிய அந்த நகையுடன் அதன் அளவு குறிப்பிட்ட அட்டை நகையோடு இணைந்தும் கிடைக்கின்றது. பளபளப்பான ரோடியம் பிளேட்டிங் சற்று விலை அதிகமானது என்றாலும் அது பூசப்பட்ட நகைகள் வரவும் அதிகரித்துள்ளது.
நன்றி
   © Malar Publications (P) Ltd