Monday, 20 May 2019

ஆம்பர்

ஆம்பர் (Amber).
மனித குலம் முதன் முதலாக பயன்படுத்த துவங்கிய கல் ஆம்பர், கற்கால மனிதர்கள் ஆம்பர் மற்றும் லாபிஸ் லசூலி (Lapiz Lazuli) கற்களை தாயத்துகளிலும், மாலைகளிலும் கட்டி வைத்து உபயோகப்படுத்தியுள்ளது அகழ்வாராய்ச்சிகளில் சான்று கிடைத்துள்ளது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களில் இருந்து வெளிவரும் பிசின் (Resin) பூமிக்குள் புதைந்து, பூமியின் கீழுள்ள வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் இறுகி, கற்களாக மாறிவிட்டன (நிலக்கரி போல), ஆம்பர் கற்களின் உட்புறத்தில் சிறு பூச்சிகள், வண்டுகள் அல்லது தாவர பாகங்கள் உறைந்து காணப்படும்.
ஆம்பர் பிசினாக இருந்து காலத்தில் அதன் மேல் ஒட்டிக் கொண்டவையே இவை. மேலும் மேலும் அதில் பிசின் படிய, அவை உட்புறத்தில் மாட்டிக் கொண்டன. பின்னர் கற்களாக மாறும்போது இந்த பூச்சிகளும் மம்மிகள் போன்று உள்ளே அழியாது தங்கிவிடுகின்றன.
ஆம்பர் கற்கள் இளம் மஞ்சள் நிறத்திலிருந்து தேன் போன்ற அடர்ந்த மஞ்சள் நிறம் வரையிலுள்ள பல வண்ணங்களில் கிடைக்கின்றன.

தன்மைகளும் பலன்களும்
வாழ்க்கையில் ஒரு நிலைத் தன்மையை உருவாக்கும்
எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நம்பிக்கையை வளர்க்கும்
உடலில் உள்ள நேர்சக்தி, எதிர்சக்திகளை (+/-)  சமநிலைபடுத்தும் ( திருஷ்டி சுற்றுவது போல்).
நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் ஆம்பர் கல்லை வைத்தால் நோயுற்ற இடத்திலுள்ள எதிர்மறையான சக்திகளை (Negative Energy)  உறிஞ்சி அகற்றிவிடும், நோய்களை உடலே குணப்படுத்தி கொள்ள வழிவகுக்கும்.
நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும்
காது நரம்புகளை வலுவாக்கும்
சுவாசக் கோளாறுகளை நீக்கும்
தைராய்ட், மண்ணீரல் ஆகியவற்றின் இயக்கங்களை அதிகரிக்கும்
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் வலுவடையச் செய்யும்
பல்வலி, தலைவலி, தொண்டைவலி ஆகியவற்றை தடுக்கும்

இக்கற்களை மோதிரத்திலோ மாலையிலோ பதித்து பயன்படுத்த கூடாது.

No comments:

Post a Comment