1 டன் மின்னணு கழிவிலிருந்து 350 கிராம் தங்கம் எடுக்கலாம்!
Posted on December 22, 2018 Author Comment(0)
Share on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin
மொபைல், பிற மின்னணுப் பொருட்களில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பலவிதமான உருமாற்றங்களை தாண்டி மதிப்புமிக்க உலோகமாக மாறுகிறது.
ஒரு சுரங்கத்தில் இருந்து மூன்று முதல் நான்கு கிராம் வரை தங்கம் எடுக்க வேண்டுமானால், அதற்காக சுமார் ஒரு டன் அளவிலான தாதுப் பொருட்கள் தேவைப்படும். ஆனால் மொபைல் போன், மடிக்கணினி போன்ற ஒரு டன் மின்னணுக் கழிவுகளில் இருந்து 350 கிராம் தங்கம் எடுக்கப்படுகிறது என்பது வியப்பூட்டும் தகவல்.
மனிதர்கள் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்களின் கழிவுகளில் இருந்து, மறுசுழற்சி மூலம் பிரிக்கப்பட்ட தங்கத்தை கொண்டு, 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை உருவாக்கும் முயற்சியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, பயனற்ற மின்னணுப் பொருட்களை நன்கொடை கொடுக்கலாம் என்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படாமல் வைத்திருக்கும் மின்னணுப் பொருட்களை நன்கொடையாக கொடுப்பார்கள் என்றும், அதிலுள்ள உலோகங்கள் பயன்படுத்தப்படும் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம், இதுவரை மின்னணுக் கழிவுகளில் இருந்து 16.5 கிலோ தங்கமும், 1800 கிலோ வெள்ளியும் பிரித்தெடுக்கப் பட்டிருக்கிறது. பதக்கங்கள் செய்ய தேவைப்படும் 2700 கிலோ வெண்கலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து ஏற்கனவே கிடைத்துவிட்டதாம்.
தங்க பதக்கத்திற்கு தேவையான 54.5% தங்கமும், வெள்ளிப் பதக்கத்திற்கு தேவையான 43.9% வெள்ளியும் கிடைத்திருக்கிறது என்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Posted on July 20, 2018 Author
நன்றி
2018 Makkal Kural
No comments:
Post a Comment