Saturday, 15 December 2018

வெள்ளி நகைகள் பாரமரித்தல் தொழில் நுட்பம்

வெள்ளி நகைகளை பராமரிக்க அதில் சேர்த்து படிந்துள்ள அழுக்கினை அகற்ற வேண்டும். சந்தையில் சிலவகை திரவங்கள் விற்கபடுகின்றன.எடுத்துகாட்டாக சில்வர் டிப்,சில்வோ போன்றவை கிடைக்கின்றன. சிறிய வெள்ளி நகைகளை இந்த திரவத்தில் மூழ்கும்படி வைத்து பிறகு பருத்தி துணியால் துடைத்து வைக்கலாம்.
பெரிய வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்ய ஒரு பெரிய பாத்திரத்தில் புளியை நீரில் கரைத்து அதில் வெள்ளி கிண்ணங்கள் பாத்திரங்களை போட்டு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு பாத்திரங்களை எடுத்து சுத்தமான நீரில் கழுவி துணியால் துடைத்திடவேண்டும் பின்னர் சிறிது விபூதியை சேர்த்து நன்றாக துணியால் துடைத்தால் பாத்திரங்கள் நல்ல பளபளப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment