சாதாரண நகைகள் மற்றும் கல்பதித்த நகைகள் வாங்கியதும்,அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க நகைக்கடைகாரார்களே வெல்வெட் துணியால் ஒட்டபட்ட பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பெட்டிகள் தருகிறார்கள்,அவற்றில் வைத்து பாதுகாப்பாக வைக்கலாம். அன்றாட உபயோகத்திற்கு அதாவது நிரந்தரமாக அணிந்து கொண்டிருக்கும் நகைகள் எடுத்து காட்டாக காது தோடுகள் மூக்குத்தி, தாலி,கொலுசு, செயின்,மெட்டி ஆகியவற்றை உடம்புக்கு உபயோகப்படுத்தும் சோப்பையே உபயோகித்து நீரால் சுத்தம் செய்து துடைத்து வைத்து கொள்ளலாம்.
கற்கள் வைத்த தோடு கம்மல் போன்ற நகைகளை மட்டும் குளிக்கும் போது தண்ணீர் படாமல் கழற்றி வைத்துவிட்டு குளித்த பிறகு அணிந்து கொள்ளலாம்.
அதாவது கற்கள் வைத்த அடிப்பக்கம் மூடியநகைகளாக இருந்தால் நீர் மற்றும் எண்ணெய் உள்ளே சென்று நகைகளின் அழகைகெடுத்துவிடும்.
மற்ற நகைகள் அணிந்து கொண்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகு சுத்தமான வெண்மையான பஞ்சுத் துணியில் துடைத்து சுத்தம் செய்து விட்டு வெல்வெட் பெட்டிகளில் பத்திரபடுத்தி வைக்கலாம். அடிக்கடி உபயோகப்படுத்துவதால்,அழுக்கு சேர்ந்திருந்தால் பூச்சக்காய் தண்ணீரில் கழுவி துடைத்து வைக்கலாம். பூச்சக்காய் எனும் ஒருவகை காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தண்ணீரில் ஊறவைத்து பிறகு முடியினால் அல்லது நைலானால் செய்யபட்ட பிரஷ்ஷால் பூச்சக்காயைத் தண்ணீரில் வைத்து தேய்த்தால் நன்றாக சோப்பு நுரை போன்று நுரை வரும். அதில் நகைகளை வைத்து நன்றாக பிரஷ்ஷினால் தேய்தபிறகு சுத்தநீரில் கழுவி துணியால் துடைத்தால் நல்ல பிரகாசமாக இருக்கும் இதன்படி சுத்தமாகப் பராமரித்தால் பிரகாசமாக நகைகள் இருக்கும்.
இவை தவிர தங்க பட்டரைகளில் இரசாயன பொடிகள் இரசாயன கலவை நீர் இவைகளை உபயோகபடுத்தி சுத்தம் செய்வதுண்டு. இதன் படி சரியான முறைப்படி செய்யபடாவிட்டால் ஏற்கனவே நகையில் இருக்கும் அழகும் கெட்டு விட வாய்ப்புள்ளது .எனவே பூச்சக்காயில் சுத்தம் செய்தால் மட்டுமே போதுமானதாகும்.

No comments:
Post a Comment