Saturday 15 December 2018

நகை வாங்குவோருக்கு ஆலோசனைகள்

நகை எதற்காக வாங்கபடுகிறோம் என்பது தீர்மானிக்க படவேண்டும், தங்கத்தின் விலைஉயர்விலும் அதிகப்பணம்பெறவேண்டும் என்பது நோக்கமாயிருப்பின் வெறும் தங்கநகை(plaingoldjewellery)மட்டுமே வாங்க வேண்டும். அதனால் கூலிசேதாரம் மட்டுமே திரும்ப கிடைக்காது.தங்கத்தின் விலை உயர்வால் அதுவும் ஒரளவுக்கு சரி செய்யபடும். மற்றபடி கல் முத்துபவளம் நகைகளாயின் கல் முத்து பவளத்திற்கு விலை எதுவும் போடப்படமாட்டது நகையில் கல்முத்துபவளம் எடைகழித்து இருப்பின் கல்முத்துபவளம் ஆகியவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும்.ஆகவே அதனை தொடர்ந்து செய்கூலி சேதாரம் அதிகம் திரும்ப கொடுக்கம் போது கல் எடையும் கழித்து விடுவார்கள் எனவே திரும்ப கிடைக்கும் பணம் குறைவாகவே இருக்கும் ஆனால் அலங்கார பொருளாக வாங்க கல் நகைதான் சிறந்தது.
கூலி,சேதாரம் கூட நஷ்டபடகூடாதிருக்க தங்கத்தை காசாக மட்டுமே வாங்க வேண்டும். ஆதிலும் குறிப்பாக24kt முத்திரை கொண்ட தங்ககாசுகளாக வாங்கினால் இன்னும் லாபம் அதிகம். வாங்கும் கடையிலேயே திரும்ப நகைகளை திரும்ப கொடுப்பது நல்லது. தற்போது hallmarkமுத்திரை பதித்த நகைகள் வாங்குவது நல்லது.
தங்க நகைகள் உபயோகித்த பின் பஞ்சு அல்லது மெதுவான துணியைக்கொண்டு நன்கு துடைத்துவிட்டு அதற்கு உரிய பெட்டியில் வைக்க வேண்டும். மஞ்சள் தூள்,சோப்பு போன்றவைகளை நகைகளில் படியவிடக்கூடாது.நகைகள் மென்மையாக உபயோகிக்க வேண்டும். தினசரி உபயோகிக்கும் நகைகள் கடினமானவையாகவும் எப்பொழுதும் உபயோகிக்கும் நகைகள் மெல்லிய எடையிலும் இருக்கலாம்.

No comments:

Post a Comment