Monday, 31 December 2018
தங்கம் அணிவதற்கு வேறு காரணம்?
தங்கம் நம் உடலை தொட்டு கொண்டு இருப்பதால் நாளடைவில் உடலில் அழகை அதிகரிக்கும் என்பதால்
அதிகமாக ஆபரணங்கள் தங்கத்தில் அணிவதன் காரணம் என்ன?
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில்
வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது என்பதனால்
Sunday, 30 December 2018
Saturday, 29 December 2018
அணிகலன் அணிவதன் மூலம் ஆளுமை திறனை ஆதிகரிக்க வேண்டுமா?
ஆளுமை திறனை அதிகரிக்க வெள்ளி மோதிரம் அணியுங்கள்
என் என்றால்
வெள்ளி மோதிரம் வியாழன் மற்றும் சந்திரண் கோள்களோடு உங்களை இணைக்கும் கோபத்தை கட்டுபடுத்தி உங்களை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் ஆதனால் உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும்
வெள்ளி மோதிரம் அணிவதன் பயண்கள்?
வெள்ளி மோதிரம் அணிவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டவிடாமல் காக்கும் ஒர் அற்புத உலோகம் வெள்ளி மோதிரம்
காலில் அணியும் நகைகளை வெள்ளியில் அணிவதற்கு காரணம் என்ன?
தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகளை தங்கத்தில் அணிவதில்லை
தங்க வங்கி அணிவதன் நன்மைகள்
கைகளகல் மணிக்கட்டுக்கு மேலே வங்கி அணியும் போது உடலில் ரத்த ஒட்டம் சிராகி பதற்றம் படபடப்பு பயம் தவிர்க்கபடுகிறது.
மார்பக புற்றுநோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்வுகளில் உறுதிபடுத்தபட்டடுஇறுக்கிறது
தங்கவளையல் அணிவதன் நன்மைகள்
வளையல் அனிவதன் மூலம்
வெள்ளையனு உற்பத்தி உற்பத்தி
உடலில் அதிகரிக்கிறது
இதன்மூலம் ஹார்மோன் சுரப்பு
சிர்செய்யபடுகிறது
இதனால் தாய்க்கும் சேய்க்கும்
நோய் எதிர்ப்பாற்றல் கூடும்
தங்க ஒட்டியாணம் அணிவதன் நன்மைகள்
ஒட்டியானம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி தூண்டபட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும் ஜிரணம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்
தங்க மூக்குத்தி அணிவதன் நன்மைகள்
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெறுக்கமான தொடர்பு உண்டு.
அப்போது மூக்குத்தி அணிவதன் மூலம் அந்த புள்ளிகள் தூண்டபடும் அது சமந்தமான நோய்கள் குணமாகும்.
மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதையும் உணரலாம்
Friday, 28 December 2018
வலைதளம் பற்றி சிறப்பு தகவல்
இவ்வலைதளம் எனது அனுபவம் எனது தேடல் தொழில் நுட்பம் சார்ந்த தேடலில் அனைவரும் பயன்படுத்தும் இணைய வழிகாட்டி ஆக வேண்டும் என்பதே
Thursday, 27 December 2018
ஆண்டுகள் ஒன்றிலிருந்து என்பது வரை பரிசளிக்கவேண்டியரத்திணங்கள்
1.தங்கநகைகள்
2.கார்னெட்
3.முத்து
4. நீலடோபாஸ்
5.நீலக்கல்
6.அமீதிஸ்ட்
7.ஒனிக்ஸ்
8.டொர்மாலின்
9.லாபிஸ்லசூலி
10.வைரநகை
11.டர்குவாயிஸ்
12.ஜேட்
13.சிட்ரின்
14.ஒவல்
15.மாணிக்கம்
16. பெரிடாட்
17.கடிகாரம்
18.வைடுரியம்
19.ஆக்குவாமெரைன்
20.மரகதம்
21.லோலைட்
22.ஸ்பினியல்
23.இம்பீரியல் டோபாஸ்
24.டான்ஜானைட்
25.வெள்ளி
26.
27.
28.
29.
30.முத்து
31.
32.
33.
34.
35.மரகதம்
36.
37.
38.
39.
40.மாணிக்கம்
41.
42.
43.
44.
45.நீலம்
46.
47.
48.
49.
50.தங்கம்
51.
52.
53.
54.
55.அலெக்சாண்டார்ண்ரைட்
56.
57.
58.
59.
60.வைரம்
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.நீலம்
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.மாணிக்கம்
Tuesday, 25 December 2018
உங்களது தங்கத்திற்கு பாதுகாப்பு வேண்டுமா ? அப்போது இந்த புத்தகம் உங்கள் விட்டு அலமாரியில் இருக்கவேண்டும்
Features & details
Product information
Publisher Kizhakku
Publication date January 8, 2009
Language Tamil
ISBN-10 8183689108
ISBN-13 978-8183689106
Monday, 24 December 2018
மின்னணு கழிவு ஒரு 1டன் லிருந்து 350கிராம் தங்கம்!
1 டன் மின்னணு கழிவிலிருந்து 350 கிராம் தங்கம் எடுக்கலாம்!
Posted on December 22, 2018 Author Comment(0)
Share on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin
மொபைல், பிற மின்னணுப் பொருட்களில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பலவிதமான உருமாற்றங்களை தாண்டி மதிப்புமிக்க உலோகமாக மாறுகிறது.
ஒரு சுரங்கத்தில் இருந்து மூன்று முதல் நான்கு கிராம் வரை தங்கம் எடுக்க வேண்டுமானால், அதற்காக சுமார் ஒரு டன் அளவிலான தாதுப் பொருட்கள் தேவைப்படும். ஆனால் மொபைல் போன், மடிக்கணினி போன்ற ஒரு டன் மின்னணுக் கழிவுகளில் இருந்து 350 கிராம் தங்கம் எடுக்கப்படுகிறது என்பது வியப்பூட்டும் தகவல்.
மனிதர்கள் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்களின் கழிவுகளில் இருந்து, மறுசுழற்சி மூலம் பிரிக்கப்பட்ட தங்கத்தை கொண்டு, 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை உருவாக்கும் முயற்சியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, பயனற்ற மின்னணுப் பொருட்களை நன்கொடை கொடுக்கலாம் என்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படாமல் வைத்திருக்கும் மின்னணுப் பொருட்களை நன்கொடையாக கொடுப்பார்கள் என்றும், அதிலுள்ள உலோகங்கள் பயன்படுத்தப்படும் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம், இதுவரை மின்னணுக் கழிவுகளில் இருந்து 16.5 கிலோ தங்கமும், 1800 கிலோ வெள்ளியும் பிரித்தெடுக்கப் பட்டிருக்கிறது. பதக்கங்கள் செய்ய தேவைப்படும் 2700 கிலோ வெண்கலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து ஏற்கனவே கிடைத்துவிட்டதாம்.
தங்க பதக்கத்திற்கு தேவையான 54.5% தங்கமும், வெள்ளிப் பதக்கத்திற்கு தேவையான 43.9% வெள்ளியும் கிடைத்திருக்கிறது என்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Posted on July 20, 2018 Author
நன்றி
2018 Makkal Kural
குழப்பங்களை திர்க்கும் ஆற்றலை கிரகிக்கும்வெள்ளி மோதிரம்
நீங்கள் சமாளிக்க முடியாத நோயுடனோ அல்லது மனக் குழப்பங்கள், பிரச்சினைகள் இவற்றுடன் காணப்பட்டால் அந்த சமயங்களில் இந்த வெள்ளி உலோகம் உங்கள் மனதில் ஒரு நிம்மதியையும் அமைதியான அலைகளையும் இட்டுச் செல்கிறது. உங்கள் சுண்டு விரலில் அணிந்திருக்கும் வெள்ளி மோதிரத்தை ஒரு தண்ணீர் பெளலில் வைத்து பார்த்தால் அது ஆற்றலை கிரகிக்கும் சக்தியுடன் காணப்படுவது தெரியும்.
வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கும் நண்மைகள்
வெள்ளி மோதிரத்தை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்த்தால் இது உங்கள் அழகை அதிகரிக்கும், உங்களது ஆளுமை திறனை வியாழன் மற்றும் சந்திரன் கோள்களோடு இணைக்கும், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உங்களை எப்பவும் கூலாக சந்தோஷமாக வைத்திருக்கும்.
மூட்டு பாதிப்புகளை குணப்படுத்தும் வெள்ளி மோதிரம்
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்து காணப்பட்டால் உங்கள் அறிவுப்பூர்வமான எண்ணங்கள் பலவீனமடைந்து மற்றும் நோய்கள் காணப்படும்.ஆனால் இந்த வெள்ளி மோதிரம் சந்திரன் பார்வைக்கு வலுக்கொடுத்து பலம் தந்து உங்கள் இருமல், சளி, மூட்டு வலிகள் மற்ற எல்லா மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றையெல்லாம் சரியாக்கும்.
ஜலதோஷம் சைனஸ் பிரச்சினை திர்க்கும் வெள்ளி பொருட்கள்
வெள்ளி பெளலில் தேன் இட்டு அதை வெள்ளி ஸ்பூனால் பருகினால் சலதோஷம், சைனஸ் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
வெள்ளியும் நோய் எதிர்ப்பு செல்களும்
வெள்ளி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கிறது. எனவே நோய்கள் நடமாடும் இந்த நவீன உலகத்தில் இந்த வெள்ளி உலோகம் மிகவும் இன்றியமையாதது ஆகும். இதனால் ஆரோக்கியமான வாழ்வு பெற்று வாழவும் முடியும்.
Saturday, 22 December 2018
மலையாள தேசத்தின் மஞ்சள் பித்தும் கேரள நகைஅடகுக்கடைகள் வளர்சியும்
பெண்கள் மெட்டி அணிய காரணம்
திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர்.
கால்கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவது எதனால் என்றால் கால்கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்களின் கருப்பை நரம்புகள் வந்து நுனிகளில் முடிகின்றன ஆதனால் தான்
மேலும் கருப்பையின் நீர் சமநீலை எப்போதும் பாதிப்படைவதில்லை
எனவே பெண்கள் காலில் மெட்டியை அணிகிறார்கள்.
Friday, 21 December 2018
916தங்கநகை விளக்கம் மற்றும் தங்கநகை வாங்குவோரின் கவனத்திற்கு
நமது வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று தங்கம் என்ற உலோகம். அரசன் ஆனாலும் சரி ஆண்டி ஆனாலும் சரி, கடுகளவாவது தங்கம் இல்லாமல் வாழ்வதில்லை. இந்த அளவு மதிப்பு வாய்ந்த உலோகத்தை வாங்கும் பொழுது இன்று வரை யாரும் முழுமனதுடன் வாங்குவதில்லை. காரணம் தம்மை ஏமாற்றியிருபார்களோ என்ற உணர்வு.
உண்மை … சாமானியர்கள் இன்றுவரை ஏமாற்றப்படுள்ளர்கள்,, அல்லது ஏமாந்துள்ளர்கள்,, தங்கத்தின் எடையில் அல்ல தரத்தில். இதை தவிர்க்க வழியே இல்லையா. இந்த தொழில் செய்வோர் அனைவரும் இப்படிதானா. கண்டிப்பாக இல்லை.
நகை தொழிலும் பல நல்ல வியாபாரிகள் உள்ளனர். என்ன ஒன்று நல்லவர்கள் விளம்பரப்படுதப்படுவதில்லை. ஆகையால் இங்கே சில கோட்டான்கள் குதித்து விளையாடிக்கொண்டிருகிறார்கள், ஏமாந்தவர்களின் இதயத்தில் ஏறி.
இதற்கான ஒரு சிறு விழிப்புணர்வு முயற்சியே தொடர்ந்து வரும் கட்டுரை. இந்த இடத்தில் இந்த கட்டுரையை எழுதிய நண்பர் திரு.தமிழ் அமுதன் பற்றி குறுப்பிட்டே ஆகா வேண்டும். இவர் தங்க பட்டறை நடத்தி வருகிறார். தனது தொழிலின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக இந்த கட்டுரையை எனது வேண்டுகோளுக்கிணங்க, நமது வலைத்தளத்தில் இடுவதர்க்காக அனுபியுள்ளார். அவரது வேலைகளுக்கு இடையில் சிரமம் பாராமல் அவர் செய்த இந்த உதவிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இனி தங்கம் என்ற உலோகத்தின் உலகத்திற்கு செல்வோம்…
91.6 …… ஒரு விளக்கம்
91.6 என்பது ஒரு கிராம் ஆபரண தங்கத்தில் 91.6% சுத்தமான 24 கேரட் தங்கம் . மீதி 8.4 சதவீதம் செம்பு ,மற்றும் வெள்ளி ஆகும். 91.6 தங்கம்தான் 22 கேரட் தங்கம் .
KDM என்றால் என்ன ?
முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று ஒரு கலவையை பயன் படுத்துவார்கள் . (தங்கம் + வெள்ளி +செம்பு ) இந்த மூன்றும் சேர்ந்ததுதான் பொடி . இந்த பொடியை பயன்படுத்தி நகை பற்றவைக்கும் போது பொடியில் உள்ள செம்பு , மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன் சேர்ந்து விடும் அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும் . ஆனால் KDM வந்த பிறகு அந்த பிரச்சனை இல்லை . ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் KDM சேர்த்தால் போதும். பற்றவைக்க இதனை பயன் படுத்தலாம் .பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் KDM மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும் நகையில் இருக்கும் .
செய்கூலி சேதாரம்
தற்போது கூலி இல்லை ,சேதம் இல்லை என விளம்பரங்கள் வருகின்றன .ஆனால் கூலி இல்லாமல் சேதம் இல்லாமல் தரமான 91.6 kdm நகையை கொடுக்க முடியாது. உதாரணமாக கல் வைத்த மோதிரம் ஒரு நகை பட்டறையில் எப்படி தயாராகிறது என்று பார்ப்போம்.
1. முதலில் சுத்தமான 24 கேரட் தங்கம், செம்பு மற்றும் வெள்ளி சேர்த்து , 22 கேரட் ஆபரண தங்கமாக மாற்ற படுகிறது
2. மோதிரம் முதலில் மோல்டிங் செய்யப்படுகிறது . மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது.
3. பின்னர் அளவு தட்டி, ராவி சுத்தம் செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் , ராவும் போதும் சேதம் ஏற்படும் .
4. அடுத்து மோதிரம் பம்பிங் முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும்.
5. பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க, செதுக்க , நகை செய்பவரால் கூலி ,மற்றும் சேதம் கொடுக்க படுகிறது.
6. பின்னர் நீர் மெருகு போடப்பட்டு மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.
இப்படி ஒரு மோதிரம் செய்ய இவ்வளவு வேலை இருக்கும் போது கூலி இல்லாமல் ,சேதம் இல்லாமல் தரமான 916 KDM நகை எப்படி கொடுக்க முடியும் . அப்படியே கொடுத்தாலும் வேறுவகையில் பிடுங்கி விடுவார்கள்.
ஒரு நகை செய்ய நகையின் தன்மைக்கு ஏற்ப மூன்று முதல் எட்டு சதவீதம் வரை நகை செய்பவருக்கு கொடுக்கப்படுகிறது . இடைத்தரகர் மூலம் ( இடைத்தரகருக்கு கமிசன் போக ) மொத்த வியாபாரிக்கு செல்கிறது . பிறகு (மொத்த வியாபாரிக்கு கமிசன் போக ) நகை கடைக்கு செல்கிறது . மக்கள் நகை வாங்க செல்லும் போது இடைதரகர் கமிசன் ,மொத்த வியாபாரி கமிசன் எல்லாம் மக்கள் தலையில் சுமத்தப்படுகிறது.
நகை வாங்கும் போது
91.6 KDM மட்டும் வாங்கணும்
ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ஆயிரம் ரூபாய் எனில் , கூலி சேதம் வேறு எல்லாம் சேர்த்து 15 முதல் 20 சதவீதம் அதிகம் கொடுத்து வாங்கினால் அதுவே அதிகம்.
இப்போது சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் மக்கள் நேரடியாக தங்கள் நகைகளை வெறும் 25 ரூபாய் செலவில் தர சோதனை செய்து கொள்ளலாம்.
மிகவும் தரம் உள்ள நகைக்கு மட்டுமே ஹால் மார்க் போடுவார்கள் . ஹால் மார்க் என்பது தரத்திற்கான சான்று . ஹால் மார்க் முத்திரை இடும் நிறுவனம் துவங்க லட்ச கணக்கில் செலவுஆகும். ஹால் மார்க் என்றால் 22CT மட்டும் அல்ல 14CT ஹால் மார்க் 18CT ஹால் மார்க் அப்படி உள்ளது. மிக மிக சிறிய அளவில் தரம் குறைந்தாலும் ஹால் மார்க் முத்திரை கிடைக்காது.
22CTகீழ் உள்ள நகை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் .
ஆனால்14CT,18CT ஹால் மார்க் முத்திரை பெற்று அதற்குரிய விலை வாங்கி கொண்டு விற்பனை செய்யலாம்.
KDM என்று சொல்வது முதலில் தவறு. CADMIUM என்பதை கேடியம் என சொல்லி KDM என்று ஆகி விட்டது.
பஞ்சலேகமும் நவகிரகத்தின் சக்தியும்
தங்கம்-குருவின்சக்தி
வெள்ளி -சுக்கிரன் சக்தி
செம்பு-சூரியன் சக்தி
இரும்பு-சனியின் சக்தி
ஈயம்-கேது சக்தி
Saturday, 15 December 2018
வெள்ளி நகைகள் பாரமரித்தல் தொழில் நுட்பம்
வெள்ளி நகைகளை பராமரிக்க அதில் சேர்த்து படிந்துள்ள அழுக்கினை அகற்ற வேண்டும். சந்தையில் சிலவகை திரவங்கள் விற்கபடுகின்றன.எடுத்துகாட்டாக சில்வர் டிப்,சில்வோ போன்றவை கிடைக்கின்றன. சிறிய வெள்ளி நகைகளை இந்த திரவத்தில் மூழ்கும்படி வைத்து பிறகு பருத்தி துணியால் துடைத்து வைக்கலாம்.
பெரிய வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்ய ஒரு பெரிய பாத்திரத்தில் புளியை நீரில் கரைத்து அதில் வெள்ளி கிண்ணங்கள் பாத்திரங்களை போட்டு கொதிக்க வைக்க வேண்டும் பிறகு பாத்திரங்களை எடுத்து சுத்தமான நீரில் கழுவி துணியால் துடைத்திடவேண்டும் பின்னர் சிறிது விபூதியை சேர்த்து நன்றாக துணியால் துடைத்தால் பாத்திரங்கள் நல்ல பளபளப்பாக இருக்கும்.
தங்கநகைகள் மற்றும் கல் நகைகள் பாரமரித்தல்
கற்கள் வைத்த தோடு கம்மல் போன்ற நகைகளை மட்டும் குளிக்கும் போது தண்ணீர் படாமல் கழற்றி வைத்துவிட்டு குளித்த பிறகு அணிந்து கொள்ளலாம்.
அதாவது கற்கள் வைத்த அடிப்பக்கம் மூடியநகைகளாக இருந்தால் நீர் மற்றும் எண்ணெய் உள்ளே சென்று நகைகளின் அழகைகெடுத்துவிடும்.
மற்ற நகைகள் அணிந்து கொண்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகு சுத்தமான வெண்மையான பஞ்சுத் துணியில் துடைத்து சுத்தம் செய்து விட்டு வெல்வெட் பெட்டிகளில் பத்திரபடுத்தி வைக்கலாம். அடிக்கடி உபயோகப்படுத்துவதால்,அழுக்கு சேர்ந்திருந்தால் பூச்சக்காய் தண்ணீரில் கழுவி துடைத்து வைக்கலாம். பூச்சக்காய் எனும் ஒருவகை காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தண்ணீரில் ஊறவைத்து பிறகு முடியினால் அல்லது நைலானால் செய்யபட்ட பிரஷ்ஷால் பூச்சக்காயைத் தண்ணீரில் வைத்து தேய்த்தால் நன்றாக சோப்பு நுரை போன்று நுரை வரும். அதில் நகைகளை வைத்து நன்றாக பிரஷ்ஷினால் தேய்தபிறகு சுத்தநீரில் கழுவி துணியால் துடைத்தால் நல்ல பிரகாசமாக இருக்கும் இதன்படி சுத்தமாகப் பராமரித்தால் பிரகாசமாக நகைகள் இருக்கும்.
இவை தவிர தங்க பட்டரைகளில் இரசாயன பொடிகள் இரசாயன கலவை நீர் இவைகளை உபயோகபடுத்தி சுத்தம் செய்வதுண்டு. இதன் படி சரியான முறைப்படி செய்யபடாவிட்டால் ஏற்கனவே நகையில் இருக்கும் அழகும் கெட்டு விட வாய்ப்புள்ளது .எனவே பூச்சக்காயில் சுத்தம் செய்தால் மட்டுமே போதுமானதாகும்.
நகை வாங்குவோருக்கு ஆலோசனைகள்
கூலி,சேதாரம் கூட நஷ்டபடகூடாதிருக்க தங்கத்தை காசாக மட்டுமே வாங்க வேண்டும். ஆதிலும் குறிப்பாக24kt முத்திரை கொண்ட தங்ககாசுகளாக வாங்கினால் இன்னும் லாபம் அதிகம். வாங்கும் கடையிலேயே திரும்ப நகைகளை திரும்ப கொடுப்பது நல்லது. தற்போது hallmarkமுத்திரை பதித்த நகைகள் வாங்குவது நல்லது.
தங்க நகைகள் உபயோகித்த பின் பஞ்சு அல்லது மெதுவான துணியைக்கொண்டு நன்கு துடைத்துவிட்டு அதற்கு உரிய பெட்டியில் வைக்க வேண்டும். மஞ்சள் தூள்,சோப்பு போன்றவைகளை நகைகளில் படியவிடக்கூடாது.நகைகள் மென்மையாக உபயோகிக்க வேண்டும். தினசரி உபயோகிக்கும் நகைகள் கடினமானவையாகவும் எப்பொழுதும் உபயோகிக்கும் நகைகள் மெல்லிய எடையிலும் இருக்கலாம்.
Friday, 14 December 2018
தங்கத்திற்கு முன்னே செம்பு கண்டுபிடிக்கபட்டதா?
எங்களது மதிப்பு மிக்க உலோகங்கள் பற்றிய ஆய்வில் முதலில் கண்டுபிடிக்க பட்ட உலோகம் செம்பு ஆக உள்ளது எனென்றால் கிமு 9ம்,கிமு 10ம் நூற்றாண்டுகளில் வந்த போனிசியா வணிகத்தால் மிண்டும் உலோக நாணயங்களையும் செழிப்பையும் கொண்டுவந்துள்ளது என்று அறிகிறோம் எங்களது தேடலில் முதலில் பயண்பாட்டுக்கு வந்த உலோகம் தங்கமா இல்லை வெள்ளியா
அல்லது செம்பா என்ற ஆய்வில் நாணயவியல் துறை சார்ந்த ஆய்வுகள் முலம் எங்களுக்கு தெரியவந்தது சங்ககாலம் முதற்கொண்டு முதன் முதலில் கண்டுபிடித்த உலோகம் செம்பு என்று உங்களிடம் சமர்பிக்கிறோம்.
வைரத்தை காட்டிலும் இரண்டு விலை உயர்ந்த கற்கள்
தங்கத்தை காட்டிலும் விலை மதிப்பு மிக்க ஆறு உலோகங்கள்
கலிஃபோர்னியம்
டிரிட்டியம்
புளுட்டோனியம்
பிளாட்டினம்
ரோடியம்
Thursday, 13 December 2018
கேரட் என்ற அளவிடு தோன்றிய வரலாறு
என்ற விதையை பயன்படுத்தி எடையை அளந்து வந்தார்கள்.மேலும் தென் ஆப்பிரிக்காவில் எகேரோட் காரட் என்ற விதையை பயண்படுத்தி கற்களின் எடையை அளந்து வந்தனர்.இதிலிருந்து தான் காரட்(Ct)என்ற முறைவந்து
இப்போது உலகம் முழுவதும்(கேரட்)என்ற எடை அளவிலேயே கற்கள் எடை அளக்கபடுகிறது மேலும் செண்ட்(cent)
பாயிண்ட்(point)என்ற முறையிலும் அளக்கபடுகிறது
உளுந்து (grain) – 65 மி. கி.
குன்றிமணி - 130 மி. கி.
மஞ்சாடி - 260 மி.கி.
மாசம் - 780 மி.கி.
பனவெடை - 488 மி.கி
32 குன்றிமணி1 வராகன்(வராகனெடை)1.067 கிராம்
10 வராகனெடை1 பலம்10.67 கிராம்
8 பலம்1 சேர்85.33 கிராம்
5 சேர்1 வீசை426.67 கிராம்
4 நெல்லெடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை வல்லம்
5 பணவெடை = 1 கழஞ்சு
10 வல்லம் = ஒரு கழஞ்சு= 16அவுன்சு
8 பணவெடை = 1 வராகனெடை
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்
1 நெல் (எடை)8.33 மில்லிகிராம்
4 நெல்1 குன்றிமணி33.33 மில்லிகிராம்
2 குன்றிமணி1 மஞ்சாடி66.67 மில்லிகிராம்
2 மஞ்சாடி1 பணம்(பணவெடை)133.33 மில்லிகிராம்
8 பணம்(பணவெடை)1 வராகன்1.067 கிராம்
5 வராகன்1 கழஞ்சு5.33 கிராம்
4 கழஞ்சு1 கஃசு10.4 கிராம்
4 கஃசு1 பலம்41.6 கிராம்
1.5 கழஞ்சு8 கிராம்
தற்போது உள்ள அளவை முறைகள்
1காரட்-200மில்லிகிராம்=0.200மீ.கீ
1காரட்-100சென்ட்=0.200மீ.கீ
1சென்ட்-1பாய்ண்ட்(0.002)மீ.கீ
உலகநாடுகளில் பயன்படுத்தும்தங்ககேரட்டின் அளவுகள்
அமெரிக்க-10மற்றும்14கேரட்
இங்கிலாந்து-9கேரட்
ஜெர்மனி-8கேரட்
போர்சுக்கல்-19.2கேரட்
அராபிக்நாடுகள்-21கேரட்
இந்தியா-22கேரட்
இத்தாலி-18கேரட்
அடிப்படை உலோகங்கள்குறியீடு
டிட்டானியம்-Ti
கோபால்ட்-Co
நிக்கல்-Ni
தாமிரம்-Cu
தூத்தநாகம்-Zn
காலியம்-Ga
காட்மியம்-Cd
இண்டியம்-In
டின்-Sn
டங்ஸ்டன்-W
மெர்க்குரி-Hg
லெட்-Pb
பிளாட்டினம் சார்ந்த உலோகங்கள் குறியீடு
ரூதேனியம்-Ru
ரோடியம்-Rh
பெல்லாடியம்-pd
ஆஸ்மியம்-os
இரிடியம்-Ir
Wednesday, 12 December 2018
தங்கம் மற்றும் வெள்ளி நூல் ஆடை வடிவமைப்பு அறிமுகம்
http://www.rkjeweltech.com/
வலைதளநோக்கம்
ஜாதிகற்கள் ,வைரம் மற்றும் தங்கநகை தரமதிப்பிடு தொழில் நுட்பம், ஜாதிகற்கள் அடையாளம் கானுதல் நகைமற்றும்நவரத்தினமதிப்பிட்டாளர்
பயிற்சி நவீன தொழில் நுட்பம் பற்றி அலசி ஆராய்ந்து உங்களிடம் சமர்பிப்பத்து அனைவரையும் பார்வையாளராக அன்புடன் அழைக்கிறோம்
Tuesday, 11 December 2018
எடை மற்றும் தராசு வகைகள்
தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவன ஆதாரங்களின் படி,எகிப்தியாரல் கி.மு.3000ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தல் அளவுக்காக தங்கத்துகள்,தங்ககட்டிகள் பயண்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இவை நகை தொழிலாளர்களும்,நகைவியாபாரிகளும் பயண்படுத்தியுள்ளார்கள்,அதன் பிறகு, ஆங்கிலேய அரசு,நிறுத்தல் அளவை சீராக்குவதற்கு மூன்று வகையாக பிரித்துள்ளது.
அவைA.வகைB.வகைC.வகை
A.வகை எடைகருவிகள்,வைரம் மற்றும் மருந்து வகைகளை எடை போடவும்
B.வகைஎடைகருவிகள்,தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை மதிப்பு உலோகப்பொருள்களை எடை போடவும்
C.வகை எடைகருவிகள், இரும்பு ,உணவுப்பொருட்கள்,காகிதபொருட்களை எடை போடவும் பயண்படுத்தபடுகின்றன.
நகைத்தொழிலாளர்கள் மற்றும் நகை வியாபரிகள் விலை உயர்ந்த உலோகங்களையும்,கற்களையும் எடைபோடும் போது இரண்டு விதமான எடைக்கருவிகளைப்பயண்
படுத்துகிறார்கள்.
அவை
1.கைத்தராசு(manualscale)
2.மின்னணுதராசு(electronicscale)
கைத்தராசு
தங்கத்தொழில் பழங்காலம் முதல் இன்று வரை இத்தராசு பயண்படுத்தபட்டுவருகிறது.
பல்வேறு அளவுகளில் எடைக்கற்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன.இதில் 200கிராம் வரை எடைகற்கள் எடை போட
உபயோகிக்கப்படுகின்றன.
பயன்படுத்தும் எடைகற்களின் எடை
0.20gmமுதல் 200gmவரை பயன்படுத்தபடுகிறது
மின்னனுதராசு(electronicscale)
இவ்வகை தராசுகள் மின்சாரத்தின் முலம் இயங்குபவை.இதில் எடையானது வெளிச்ச எழுத்துகளால் காட்டப்படும்(LCD)Liquid Crystal
Displayபேட்டரி மூலமாகக் கூட இவை இயங்கப்படுகின்றன.இவை கீழ்கானும் இலக்க அலகுகளில் கிடைக்கின்றன.
ஓரிலக்க நுணுக்க அலகு : 0.0கிராம்
ஈரிலக்கநுணுக்க அலகு : 0.00கிராம்
மூன்றிலக்க நுணுக்க அலகு :0.000கிராம்
நான்கிலக்க நுணுக்க அலகு :0.0000
கிராம்
ஈரிலக்கநுணுக்க அலகுள்ள தராசுகள் நகைத்தொழிலார்கள் மற்றும் வியாபரிகளால் அதிமாகப் பயன்படுத்தபட்டு வருகின்றன
இங்கிலாந்து அரசு 1913ம் ஆண்டு முதல் நிறுத்து எடைபோடும் வழக்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாவில் 1958ம் ஆண்டு முதல்.தொழிலாளர் நலத்துறையின் கீழ் நிறுத்தல்,அளத்தல் படிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இதில் மூன்று வகைகள் உள்ளன
கிளாஸ்A.வைரம் மற்றும் மருந்து பொருட்களுக்கு
கிளாஸ்B.தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு
கிளாஸ்C.மளிகை சாமன் இரும்பு மற்றும் வாகனம் போன்றவைகளுக்கு ஒரு ஆண்டை நான்காக பிரித்து தராசுகளுக்கு
A,B,C,D,என்ற முறையில் முத்திரையிடப்படுகின்றன
A.காலம்-ஜனவரி முதல் மார்ச் வரை வாங்கிய தராசை ஆண்டுக்கு Aகாலத்தில் முத்திரை பதிக்க வேண்டும்
B.காலம்-ஏப்ரல் முதல் ஜுன் வரை வாங்கிய தராசை முத்திரை பதிக்க வேண்டும்
C.காலம்-ஜூலை முதல் செப்டம்பர் வரை வாங்கிய தராசை ஆண்டுக்கு C.காலத்தில் முத்திரை பதிக்க வேண்டும்
D.காலம் -அக்டோபர் முதல் டிசம்பர் வரை வாங்கிய தராசை ஆண்டுக்கு Dகாலத்தில் முத்திரை பதிக்க வேண்டும்.
வைரம் மற்றும் ராசிகற்கள் அளவிடு தொழில் நுட்பம்
கிராமிலிருந்து கேரட்
1கிராம் -5 கேரட்
0.200மீல்லிகிராம்-1கேரட்
0.020மீல்லிகிராம்-1சென்ட்
தங்கம் அளவிடு தொழில் நுட்பம்
1அவுன்ஸ் (aunce) -28.350கிராம்
16அவுன்ஸ்(Traiauce) -1பவுண்ட் (453.600கிராம்)
1டிராய்அவுன்ஸ்(Traiaunce) -31.103477கிராம்(இதை நடைமுறையில்31.104கிராம் என்று அளவிடப்படுகிறது)
12டிராய் அவுன்ஸ் -1டிராய் பவுண்ட்(373.420கிராம்)
1டோலா(Tola) -11.640கிராம்
10டோலா -116.640 கிராம்(ஆசிய நாடுகளில் இந்த அளவையை டி.டி பார் என்று அழைக்கபடுகிறது
1ஷேர் (share) 280கிராம்
1பவுண்ட்