Tuesday 11 December 2018

எடை மற்றும் தராசு வகைகள்

எடை மற்றும் தராசு வகைகள்
தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவன ஆதாரங்களின் படி,எகிப்தியாரல் கி.மு.3000ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தல் அளவுக்காக தங்கத்துகள்,தங்ககட்டிகள் பயண்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இவை நகை தொழிலாளர்களும்,நகைவியாபாரிகளும் பயண்படுத்தியுள்ளார்கள்,அதன் பிறகு, ஆங்கிலேய அரசு,நிறுத்தல் அளவை சீராக்குவதற்கு மூன்று வகையாக பிரித்துள்ளது.
அவைA.வகைB.வகைC.வகை
A.வகை எடைகருவிகள்,வைரம் மற்றும் மருந்து வகைகளை எடை போடவும்
B.வகைஎடைகருவிகள்,தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை மதிப்பு உலோகப்பொருள்களை எடை போடவும்
C.வகை எடைகருவிகள், இரும்பு ,உணவுப்பொருட்கள்,காகிதபொருட்களை எடை போடவும் பயண்படுத்தபடுகின்றன.
நகைத்தொழிலாளர்கள் மற்றும் நகை வியாபரிகள் விலை உயர்ந்த உலோகங்களையும்,கற்களையும் எடைபோடும் போது இரண்டு விதமான எடைக்கருவிகளைப்பயண்
படுத்துகிறார்கள்.
அவை
1.கைத்தராசு(manualscale)
2.மின்னணுதராசு(electronicscale)

கைத்தராசு
 தங்கத்தொழில் பழங்காலம் முதல் இன்று வரை இத்தராசு பயண்படுத்தபட்டுவருகிறது.
பல்வேறு அளவுகளில் எடைக்கற்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன.இதில் 200கிராம் வரை எடைகற்கள் எடை போட
உபயோகிக்கப்படுகின்றன.
பயன்படுத்தும் எடைகற்களின் எடை
0.20gmமுதல் 200gmவரை பயன்படுத்தபடுகிறது
மின்னனுதராசு(electronicscale)
 இவ்வகை தராசுகள் மின்சாரத்தின் முலம் இயங்குபவை.இதில் எடையானது வெளிச்ச எழுத்துகளால் காட்டப்படும்(LCD)Liquid Crystal
Displayபேட்டரி மூலமாகக் கூட இவை இயங்கப்படுகின்றன.இவை கீழ்கானும் இலக்க அலகுகளில் கிடைக்கின்றன.
    ஓரிலக்க நுணுக்க அலகு  : 0.0கிராம்
    ஈரிலக்கநுணுக்க அலகு    : 0.00கிராம்
    மூன்றிலக்க நுணுக்க அலகு :0.000கிராம்
     நான்கிலக்க நுணுக்க அலகு :0.0000
     கிராம்
ஈரிலக்கநுணுக்க அலகுள்ள தராசுகள் நகைத்தொழிலார்கள் மற்றும் வியாபரிகளால் அதிமாகப் பயன்படுத்தபட்டு வருகின்றன
  இங்கிலாந்து அரசு 1913ம் ஆண்டு முதல் நிறுத்து எடைபோடும் வழக்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாவில் 1958ம் ஆண்டு முதல்.தொழிலாளர் நலத்துறையின் கீழ் நிறுத்தல்,அளத்தல் படிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இதில் மூன்று வகைகள் உள்ளன
கிளாஸ்A.வைரம் மற்றும் மருந்து பொருட்களுக்கு
கிளாஸ்B.தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு
கிளாஸ்C.மளிகை சாமன் இரும்பு மற்றும் வாகனம் போன்றவைகளுக்கு ஒரு ஆண்டை நான்காக பிரித்து தராசுகளுக்கு
A,B,C,D,என்ற முறையில் முத்திரையிடப்படுகின்றன
A.காலம்-ஜனவரி முதல் மார்ச் வரை வாங்கிய தராசை ஆண்டுக்கு Aகாலத்தில் முத்திரை பதிக்க வேண்டும்
B.காலம்-ஏப்ரல் முதல் ஜுன் வரை வாங்கிய தராசை முத்திரை பதிக்க வேண்டும்
C.காலம்-ஜூலை முதல் செப்டம்பர் வரை வாங்கிய தராசை ஆண்டுக்கு C.காலத்தில் முத்திரை பதிக்க வேண்டும்
D.காலம் -அக்டோபர் முதல் டிசம்பர் வரை வாங்கிய தராசை ஆண்டுக்கு Dகாலத்தில் முத்திரை பதிக்க வேண்டும்.



No comments:

Post a Comment